BIGG BOSS வீட்டில் இருந்து வெளியேறும் முதல் CONTESTANT யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசனின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த வாரம் எலிமினேஷன் இருப்பதாக அறிவிக்கப்பட்டு கடந்த திங்கள் கிழமை போட்டியாளர்கள் நாமினேஷன் பிராசஸில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு வரும் இரண்டு பேரை உரிய காரணங்கள் கூறி நாமினேட் செய்ய வேண்டும் என்று விதி கூறப்பட்டது. இந்த நாமினேஷன் பிராசஸில் கவின், அபிராமி, மதுமிதா, மீரா, சரவணன், ஃபாத்திமா என சுமார் 7 பேர் நாமினேட் செய்யப்பட்டனர்.

பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்களுக்கு வாக்களிக்கலாம். அதிக வாக்குகள் பெறும் போட்டியாளர்கள் காப்பாற்றப்படுவர். நேற்றைய (ஜூலை 6) பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுமார் 10 கோடி பேர் வாக்களித்ததாக கமல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளரை கமல் இன்று (ஜூலை 7) அறிவிப்பார் என்பதால் பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பு பற்றிக்கொண்டது.

அதன் படி இன்று வெளியேறப்போகும் போட்டியாளரை கமல் அறிவித்தார். அதன்  படி பிக்பாஸ் வீட்டில் இருந்து பாத்திமா பாபு வெளியேறுகிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Fathima Babu eliminated from Kamal Haasan's Bigg Boss 3

People looking for online information on Bigg Boss 3, Fathima babu, Kamal Haasan will find this news story useful.