BHARATHI KANNAMMA: சீரியலில் இருந்து விலகும் 'வெண்பா' ஃபரீனா? "அப்படி நடக்க கூடாதே" - புலம்பும் ரசிகர்கள்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாரதி கண்ணம்மா சீரியலில் விரைவில் ஒரு முக்கிய மாற்றம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Advertising
>
Advertising

“ Are You Ready”…. KVRK படத்தின் செம்ம அப்டேட்டை வெளியிட்ட பிரபல இசை நிறுவனம்!

வில்லத்தனத்தில் மிரட்டும் வெண்பா..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஃபரீனா. இவர் வெண்பா எனும் கதாபாத்திரமாக மிகவும் பிரபலம். இந்த சீரியலில் கண்ணம்மாவின் கணவரான பாரதி, கண்ணம்மாவின் மீதான சந்தேகத்தால் அவரை பிரிந்து வாழ்கிறார். அதற்கு காரணமே வெண்பா கேரக்டர் தான். இதனிடையே பாரதி & கண்ணம்மா இருவருக்கும் பிறந்த இரு குழந்தைகளுள் லக்ஷ்மி கண்ணம்மாவிடமும், ஹேமா பாரதியிடமும் வளருகிறார்கள்.

ஃபரினாவின் பிரசவம்…

இந்நிலையில் எப்படியாவது பாரதியை திருமணம் செய்தே தீரவேண்டும் என்கிற நோக்கத்தில் பல வில்லத்தனங்களை வெண்பா செய்து வருகிறார். இப்படி வில்லத்தனங்களை செய்துவரும் வெண்பா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து பாராட்டுகளைக் குவித்து வருபவர் ஃபரினா. சமீபத்தில் இவர் கர்ப்பமடைந்திருந்த போது அதை லாவமாக மறைத்தவாறு உடையணிந்து இந்த சீரியலில் நடிக்கும் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதனால் அவரின் கதாபாத்திரம் மாற்றப்படலாம் என சொல்லப்பட்ட போது ‘கடைசி வரைக்கும் இந்த ஒரே வெண்பாதான்’ எனக் கூறியிருந்தார்.

ஷாக் எண்ட்ரி கொடுத்த வெண்பாவின் அம்மா…

பின்பு தமது பிரசவ காலத்தின் போது நடிகை ஃப்ரினா,  சீரியலில் இருந்து விலகி, குழந்தை பிறந்த சில மாதங்களில் மீண்டும் வெண்பா கதாபாத்திரத்தில் ரி எண்ட்ரி கொடுத்தார். இப்போது வெண்பாவின் அம்மா ஷர்மிளா கதாபாத்திரத்தில் பிரபல நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான, நடிகை ரேகா அறிமுகமாகி வெண்பாவை நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறார். சீரியலுக்குள் வந்ததுமே நடிகை ரேகா, பாரதியிடம் சென்று மாஸாக பேசி, வெண்பாவின் மீது பாரதிக்கு கோபத்தை வரவழைத்தார். ஷர்மிளாவின் எண்ட்ரிக்குப் பிறகு பாரதி கண்ணம்மா சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

வெண்பா மாற்றமா…

இந்நிலையில் தற்போது வெண்பா கதாபாத்திரத்துக்கு ஃபரினாவுக்குப் பதில் வேறொரு நடிகை மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அப்படி வெண்பா கதாபாத்திரத்துக்கு வேறு நடிகை மாற்றப்பட்டால் அது ஃபரினா ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கும்.

BBUltimate வின்னரை சந்தித்த ஜுலி …. ஜூலிக்கு ஐ லவ் யூ சொன்ன BB பிரபலம் – வைரல் reunion pics!

தொடர்புடைய இணைப்புகள்

Farina may walk out of bharathi kannamma serial again

People looking for online information on Bharathi Kannamma, Bharathi Kannamma Serial, Bharathi Kannamma Serial Episode, Venba, Vijay Television will find this news story useful.