பிக்பாஸ் வீட்டில் நாளுக்குநாள் சுரேஷ் சக்கரவர்த்தியின் வலிமை அதிகரித்துக் கொண்டே செல்கிறது போல. குறிப்பாக மற்றவர்களின் பலவீனங்களை இவர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார். இதை பிரீ பாஸ் கைப்பற்றுவதில் காண முடிந்தது. ஆனால் பிக்பாஸ் வில்லத்தனமாக இவர் பேசுவதை மற்றவர்களுக்கு போட்டு காண்பித்து விட்டார்.
இதனால் இவர் வெளியே வந்ததும் இதற்காகவே காத்திருந்தது போல ரியோ, வேல்முருகன், அனிதா என ஆளாளுக்கு அவரிடம் சண்டை பிடித்தனர். ஆனால் இதற்கெல்லாம் அவர் அசரவில்லை. வழக்கம்போல அனைவரையும் வெற்றிகரமாக சமாளித்து சாப்பிட கிளம்பி விட்டார். ஆரம்பத்தில் இவரால் தான் பிரச்சினை வருகிறது என ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்தனர்.
ஆனால் தற்போது நாளுக்குநாள் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தம்மா 200 நாளுக்கு ட்ரெஸ் எடுத்து வந்திருக்கு என ரேகாவை கலாய்ப்பது, இளம் போட்டியாளர்களுடன் சண்டை போடுவது என பிக்பாஸ் வீட்டின் ஆல் இன் அழகுராஜாவாகவே சுரேஷ் மாறியிருக்கிறார். இதனால் அவசரப்பட்டு அவரை வெளியில அனுப்ப வேண்டாம் என ரசிகர்கள் பிக்பாஸிடம் கோரிக்கை சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.