இந்த நாலு பேருமே 'அந்த' விஷயத்துல கிரேட்... ரசிகர்கள் ஆதரவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டை பொறுத்தவரை யார் யார் எந்தெந்த குரூப்பில் இருக்கின்றனர் என்பதை கண்டறியவே சிபிஐ உதவி தேவைப்படும் போல. அந்தளவுக்கு மாறி, மாறி சப்போர்ட் செய்து கொள்கின்றனர். இதேபோல தியாகங்களுக்கும் அங்கு பஞ்சமே இல்லை. வேல் பிரதர்ஸ் என்னும் குரூப்பில் ரியோ, அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ், சோம் ஆகிய ஐந்து பேர் இருக்கின்றனர்.

கேப்ரியலா அதில் வந்து, வந்து செல்கிறார். இதேபோல பாலாஜி கேங்கில் சம்யுக்தா, ஆஜீத், ஷிவானி ஆகியோர் இருக்கின்றனர். ரம்யா பாண்டியன் இரண்டு அணிகளுக்கும் மய்யமாக இருந்தாலும் பாலாஜியின் மறைமுக ஆதரவாளராக அவ்வப்போது தன்னை வெளிப்படுத்தி கொள்கிறார். அதே நேரம் ஆரி, சனம், அனிதா ஆகிய மூவரும் தனியாகவே தங்களது பிரச்சினைகளை சமாளித்து வருகின்றனர்.

இதில் ஆரிக்கு ஓவர் டியூட்டியாக மாறிவிடுகிறது. இந்த நிலையில் பாலாஜி, ஆரி, அனிதா, சனம் ஆகிய நான்கு பேரையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதாவது இவர்கள் நான்கு பேரும் சண்டை போட்டுக் கொண்டாலும் கூட அவர்களின் விளையாட்டை அவர்களே விளையாடுகின்றனர் என்பது தான் ரசிகர்கள் இவர்களை ஹெவியாக லைக் செய்திட காரணமாம்.

தொடர்புடைய இணைப்புகள்

Fans Support Aari, Anitha, Sanam and Balaji Murugadoss

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.