பிக்பாஸ் அல்டிமேட் தற்போது 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிற சீசன்களை போலவே, ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கும் அதிக வரவேற்புள்ளது.
அது மட்டுமில்லாமல், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வந்த இந்த நிகழ்ச்சியை கடந்த வாரத்தில் இருந்து, நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
கிராமத்து பின்னணி
இந்நிலையில், இந்த வாரத்தில் கிராமத்து காதாபாத்திரங்கள், பிராது விதிமுறைகள் மற்றும் கிராம செட்அப் என ஒட்டு மொத்த பிக்பாஸ் செட்டும் கிராமத்து பின்னணியில் அமைந்திருந்தது. இதில், பிக்பாஸ் போட்டியாளர்கள் இரண்டு குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதே போல, பிக்பாஸ் வீடும் ஏழு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, வேலி போடப்பட்டிருந்தது.
கிழவியாக ஜூலி
இரண்டு தலைக்கட்டு குடும்பங்களில் ஒன்று சினேகனின் குடும்பம். மற்றொன்று பாலாஜியுடையது. இதில் சினேகனுடைய மனைவியாக அனிதாவும், பாலாஜியின் மனைவியாக தாமரையும் வருகின்றனர். மற்ற போட்டியாளர்களும் இரு குடும்பத்தில் சில கதாபாத்திரங்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதில், ஊரின் கிழவியாக வருபவர் ஜூலி.
இந்த வார டாஸ்க்
இந்த கிராமத்து பின்னணியில் வரும் டாஸ்க்கள் தான் ஹைலைட். முன்னதாக, நிரூப் மற்றும் சுருதி ஆகியோரின் திருமண நிகழ்ச்சியும் டாஸ்கில் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பான ப்ரோமோ வீடியோக்கள், அதிகம் வைரலாகி இருந்தது. அதே போல, மற்றொரு டாஸ்க்கில், இரு குடும்பத்தில் ஒருவர் பிராது அளிக்க வேண்டும்.
அது பிக்பாஸ் அல்டிமேட்டிள் நடந்த பழைய பிரச்சனையாக கூட இருக்கலாம். எதிர் தரப்பும் இதற்கு விளக்கம் அளிக்கலாம். பஞ்சாயத்தில் யாருக்கு சாதகமாக தீர்ப்பு வருகிறதோ, அவர்கள் வீட்டின் ஏழு பகுதிகளில் ஒன்றை கைப்பற்றிக் கொள்ள முடியும். இப்படி மற்ற அனைத்து பகுதிகளையும் குடும்பத்தினர் கைப்பற்ற வேண்டும்.
அனிதா - ஜூலி
விதிமுறை விளக்கப்பட்ட உடனேயே, ஜூலி மற்றும் நிரூப் ஆகியோருக்கு இடையே சண்டை வெடித்தது. ஜூலியின் கிழவி கதாபாத்திரம் பற்றி நிரூப் கிண்டலடிக்க, பதிலுக்கு கோபத்தில் கொந்தளிக்கிறார் ஜூலி. இதன் பிறகு தான் அனிதா - ஜூலி இடையே பிரச்சனை வெடித்தது.
பதிலடி கொடுத்த அனிதா
பிராது விவகாரத்தில் சினேகனிடம் பாலா எதையோ விசாரிக்க போனார். ஆனால், அதற்கான விளக்கத்தை அனிதா கொடுத்தார். "நான் அவருகிட்ட தானே பேசிட்டு இருக்கேன்.. நீங்க என்ன அவரோட சொம்பா?" என பாலா கேட்க, "அந்த நேரத்துல நான் அங்க இருந்தேன். அதான் விளக்கம் சொல்றேன். நீ கூடத்தான் அபிராமி பக்கம் பேசுறே. அபிராமிக்கு சொம்பு தூக்குறேனு நானும் சொல்லட்டுமா?" என அனிதாவும் பதிலடி கொடுக்கிறார்.
தூக்கிட்டு வராதீங்க
“நான் கேப்டன் ஆக விருப்பமில்லைன்னு சொல்லிட்டேன். அப்புறமும் எனக்காக விளையாடினது முட்டாள்தனம்” என பாலா மீண்டும் பேச, இன்னொரு பக்கம் அனிதாவும் நிரூப்பும் மல்லுக்கட்ட, வாக்குவாதம் நீண்டு கொண்டே போனது. அப்போது களத்தில் குதித்த ஜூலி, "Women Card-ஐ தூக்கிட்டு வர வேணாம்" என அனிதாவிடம், ஜூலி கோபமாக கூற, அனிதாவின் முகமே மாறி போனது.
அனிதா மீதான பார்வை
பிராது டாஸ்கில் ஜூலியிடம் பாலாஜி முருகதாஸ் பற்றி அனிதா கேட்க அதற்கு ஜூலி, பாலா மாற்றி மாற்றிப் பேசுவதை சில வேளைகளில் தான் கொண்டிருப்பதாக கூறினார்.
இதுபற்றி பின்னர் சிநேகனிடம் பேசும் அனிதா, "ஜூலியின் இந்த பிராது ஜெயிக்காது, இருப்பினும் நான் இதை என் பற்றிய சில விஷயங்களை தெளிவு படுத்துவதற்காக பயன்படுத்தி கொள்ளலாம்" என பேசியது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. அதே சமயம் அனிதா துல்லியமாகவும் லாஜிக்காகவும் தான் பேசுகிறார், அதில் ஸ்ட்ராட்டஜி இருந்தால் அதையே தான் பாலாஜியும் பண்ணுகிறார், பிறகு ஏன் அனிதாவை மட்டும் விமர்சிக்கிறார்கள் ? என்று அனிதா ஆதரவாளர்கள் கேட்டு வருகின்றனர்.
இதனிடையே சில ரசிகர்கள், "ஜூலி பிரியாது ஜெயிக்காது என்றால், அனிதா தன் சொந்த விஷயத்துக்காக அந்த பிராதை ஜூலியிடம் கேட்டு பயன்படுத்தலாமா?" என்றும் கேட்டுள்ளனர்.
ஜூலிக்கு குவியும் பாராட்டுகள்
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் பல வேளைகளில் கோபமாகவும் கிடுக்குப்பிடி கேள்விகளாலும் ஜூலியை தொடர்ந்து அனிதா கேள்வி கேட்பதாகவும், ஆனால் ஜூலி அவற்றை கூலாகவும், பொறுமையுடனும் ஹேண்டில் செய்வதாகவும், இன்முகத்துடன் அனிதாவுக்கு உணவு பரிமாறியதாகவும் கூறி ஜூலியை பாராட்டி வரும் சில ரசிகர்கள், பிக்பாஸ் முதல் சீசனில் நிறைய விமர்சனங்களை எதிர்கொண்ட ஜூலி, இந்த முறை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்னும் பக்குவப்பட்டிருப்பதாகவும் கூறி வருகின்றனர்.