எதுவும் நிரந்தம் கிடையாது என்பது மனிதர்களுக்கும் பொருந்தும். அமைதியாக இருந்த பிக்பாஸ் வீட்டில் இப்போது தினசரி பல சண்டைகள் நடக்கின்றன. அதுவும் இந்த வாரம் சொல்லவே வேண்டாம். இதை வைத்து கோர்ட் டாஸ்க் ஒன்றை உருவாக்கிய பிக்பாஸ் சுசித்ராவை நீதிபதியாக போட்டு வில்லங்கத்துக்கு விளக்கேற்றி வைத்துள்ளார்.
நேற்று சோமசேகர் மற்றும் பாலாஜி இடையிலான சண்டை கோர்ட்டுக்கு வந்தது. இதில் சோம்க்கு ஆதரவாக ஏராளமான பேர் வந்து நின்றனர். அதில் ரம்யா பாண்டியன், ரியோ, சுரேஷ் சக்கரவர்த்தி என அனைவரும் தங்களது நியாயத்தை எடுத்து சொல்லி சோமை வெற்றி பெற வைத்தனர். குறிப்பாக குரூப்பிஸம் என்ற வார்த்தையால் சிக்கிய ரியோ தற்போது நன்றாக ஸ்கோர் செய்து வருகிறார்.
சனம், அனிதா, சோமசேகர், நிஷா என யாரிடம் பேசினாலும் அவர்களுக்கு தேவையான கருத்துக்களை அவர் கொடுப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நேற்று குழந்தைன்னு சொன்னா உனக்கு கஷ்டமா இருக்கு அதேபோல தான் என பாலாஜி சொன்ன வார்த்தையை வைத்தே அவரை மடக்கினார். இதேபோல அனிதாவும் தேவையான கருத்தை தெளிவாக எடுத்து சொன்னார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் இதேபோல விளையாடினால் ரம்யா, ரியோ, அனிதா மூன்று பேரும் இறுதிப்போட்டி வரை வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.