அப்படி நடந்தா நான் 'ஷோவே' விட்டே போறேன்... என்ன ஒரு மெமரி பவர்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் படலம் நடந்தது. இதற்கு பின் இது கடைசி வாரம் என்பதால் கேப்டன் உட்பட அனைவரும் நாமினேஷன் லிஸ்டில் இருப்பதாக பிக்பாஸ் அறிவித்தார். (என்ன ஒரு வில்லத்தனம்) அனைவரது முழு பெயர்களையும் சொல்லி அவர் இதை சொன்னது கேட்கவும், பார்க்கவும் நன்றாக இருந்தது. இதையடுத்து டிக்கெட் டூ பினாலே டாஸ்க் இந்த வாரத்தில் தொடங்கியதாக பிக்பாஸ் அறிவித்தார்.

இதில் முதல் போட்டியாக போட்டியாளர்கள் அனைவரும் தண்ணீர் அடங்கிய பலூன் ஒன்றை குண்டூசிக்கு நேராக தூக்கிப்பிடித்து நிற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதில் கேபி, ஷிவானி, ரம்யா ஆகியோர் சட்டென வெளியேறி விட்டனர். கை மடங்கக்கூடாது என்பது போட்டியின் விதி. ஆனால் சோம் கையை பல தருணங்களில் மடக்கி விட்டார். இதனால் தனக்கு மூன்றாவது இடம் வேண்டும் என ஆரி, சோமிடம் கேட்டார். அப்போது நான் கைய மடக்கி இருந்தா சொல்லு நான் ஷோவே விட்டே போய்டறேன் என ஆரி டென்சன் ஆனார்.

ஆச்சரியமாக இந்த விஷயத்தில் ஆரிக்கு ஷிவானி உள்ளிட்ட சக போட்டியாளர்களின் ஆதரவு கிடைத்தது. பின்னர் போட்டியின் விதிகளை படித்துப் பார்த்த சோம் ஆமாம் என தான் கையை மடக்கிக்கொண்டதை ஒப்புக்கொண்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன ஒரு மெமரி பவர் என ஆரியை பாராட்டி வருகின்றனர். தற்போது ஆரி, பாலாஜி இருவரும் சம மதிப்பெண்களுடன் இதில் நீடித்து வருகின்றனர். யாருக்கு அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தொடர்புடைய இணைப்புகள்

Fans praised Aari's Memory power in Ticket to Finale Task

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.