நேற்று ஆரி-பாலாஜி சண்டையை சமரசம் செய்கிறேன் பேர்வழி என சனம் அதை இன்னும் ஊதி பெருசாக்கி விட்டார். இதைப்பார்த்து பிக்பாஸே என் இனமடா நீ? என மனதார பாராட்டி இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அப்போது ஆரி,பாலாஜி சொடக்குப்போட்டு பேசியதை சொல்ல பாலாஜி நான் அப்படி எல்லாம் செய்யவே இல்லை என பிடிவாதம் பிடித்தார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் எப்போ எல்லாம் வாய்ப்பு கெடைக்குதோ அப்ப எல்லாம் சனம், பாலாஜியை வச்சு செஞ்சு விடுறாங்க என சனமிற்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். இதேபோல அனிதாவும் ஆரி-பாலாஜி பிரச்சினையில் யாருக்கும் ஆதரவு அளிக்காமல் தெளிவாக கருத்துக்களை எடுத்து வைத்ததும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அனிதா, சனம் இருவரும் வலிமையான போட்டியாளர்களாக உருவெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags : Bigg Boss 4 Tamil