நேற்று பிக்பாஸ் வீடே ரணகளமாக இருந்தது. நாமினேஷன் முடிந்த உடன் பிக்பாஸ் தன்னுடைய திருவிளையாடலை காட்டி விட்டார். உண்மையை சொல்ல வேண்டும் என டாஸ்க் வைத்து எக்கச்சக்க சண்டைகளுக்கு விதை போட்டார். அவர் எதிர்பார்ப்பு வீணாகவில்லை. டாஸ்க் முடிவதற்குள் சண்டை வந்துவிட்டது. அமைதியாக இருந்த வேல்முருகன் திடீரென பொங்கி விட்டார்.
இதனால் அங்கு ஒரு உரசல் ஏற்பட்டது. இதெல்லாம் முடிந்தது என நினைத்தால் தன்னை பேசவிடவில்லை என அனிதா பொங்கி விட்டார். கடைசியில் அவரை ரியோவும், ஆரியும் சமாதானம் செய்தனர். இதற்கெல்லாம் உச்சமாக நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே சனம்-சுரேஷ் சண்டை நிகழ்ந்தது. என்கிட்ட வச்சுக்காத என டெரராக அவரை சுரேஷ் மிரட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த எல்லா சண்டையிலும் மறைமுக காரணமாக பாலாஜி, சுரேஷ் இருவரும் தான் பிரதான இடம் பிடித்தனர். ஆனாலும் அவர்களால் நேற்று நிகழ்ச்சி சூப்பராக இருந்தாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வார நாமினேஷன் பட்டியலில் அவர்கள் இருவரும் இடம்பிடித்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.