தளபதி விஜய்க்கு ஆளூயர சிலை! பனையூரில் மாஸ் காட்டிய மக்கள் இயக்க நிர்வாகிகள்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு என்று பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில் விஜயின் பெயரைச்சொல்லி பல நலத்திட்ட உதவிகளை மக்கள் இயக்கம் சார்பில் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தங்களது ரசிக மனப்பான்மையை வெளிப்படுத்தும் நோக்கில் மங்களூர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய்க்கு ஆளூயர சிலை வடிவமைக்கப்பட்டு, கடவுளே விஜய்யே!, மனித கடவுள் விஜய்!, மன்னாதிமன்னன் விஜய்!, விஜய் வாழ்க! போன்ற கோஷங்களுடன் சென்னைக்கு அருகில் உள்ள விஜய்யின் வீட்டில் அமைந்துள்ள விஜய் தலைமை மக்கள் இயக்க அலுவலகத்தில் அந்த சிலை நிறுவப்பட்டது.

நூற்றுக்கணக்கான ரசிகர்கள் இந்த சிலை நிறுவும் நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கெடுத்து, இந்த நிகழ்வுக்கு தலைமையேற்றி நடத்தினார்.

தற்போது விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் 'பீஸ்ட்' எனும் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

தளபதி விஜய்க்கு ஆளூயர சிலை! பனையூரில் மாஸ் காட்டிய மக்கள் இயக்க நிர்வாகிகள்!!! வீடியோ

Tags : Beast, Vijay

தொடர்புடைய இணைப்புகள்

Fans build statue for vijay at vijay panaiyur house office

People looking for online information on Beast, Vijay will find this news story useful.