வெங்கட்பிரபுவின் புது படத்துல அந்த தகவல் இல்லையே…. பிரேம்ஜியிடம் UPDATE கேட்கும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு இன்று காலை வெளியானது.

Advertising
>
Advertising

மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட்  மற்றும் ஜெயப்பிரகாஷ்  உள்ளிட்ட பலர் நடிக்கும் மன்மத லீலை திரைப்படம் ஏப்ரல் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இளைஞர்களைக் கவரும் உருவாக்கப்பட்ட இந்த  A சான்றிதழ் அளிக்கப்பட்டு இருந்த நிலையில் இளைஞர்களை இந்த படம் பெரிதும் கவர்ந்துள்ளது.


வெங்கட் பிரபுவின் புதிய படம்…


மாநாடு மற்றும் மன்மதலீலை என அடுத்தடுத்து இரு வெற்றிப் படங்களைக் கொடுத்த வெங்கட்பிரபுவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. சமீபத்தில் வெங்கட் பிரபு தனது அடுத்த படம் ஒரு தெலுங்குப் படமாக இருக்கலாம் எனக் கூறியிருந்தார். அதை உறுதி செய்யும் வகையில் இன்று அவரின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது.

தமிழ் தெலுங்கு இருமொழிப்படம்…

தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் அடுத்து வெங்கட் பிரபு இணையும் படம் குறித்த புகைப்படங்கள் இன்று காலை வெளியாகின. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகிறது. இந்த படம் நாக சைதன்யாவின் 22வது படம். மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் 11 ஆவது படமாகும். தயாரிப்பாளர் ஶ்ரீனிவாச சித்துரி, Srinivasaa Silver Screens சார்பில் தயாரிக்கும் இந்த படத்தினை பவன் குமார் வழங்குகிறார். சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் பிரமாண்டமாக உருவாகவுள்ளது.

பிரேம்ஜியிடம் அப்டேட் கேட்கும் ரசிகர்கள்

இந்த படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய எந்த விவரமும் அந்த புகைப்படத்தில் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த புகைப்படத்தைப் பகிர்ந்திருந்த இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி அமரனிடம் ரசிகர்கள் பலரும் ‘இந்த படத்துக்கு இசையமைப்பாளர் யார்? நீங்களா? இல்லை யுவன் ஷங்கர் ராஜாவா?’ என சரமாரியாக கேள்விகளைக் கேட்டு வருகின்றனர்.

இதுவரை வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான பார்ட்டி மற்றும் மன்மத லீலை ஆகிய இரு படங்கள் தவிர்த்து அனைத்து படங்களுக்கும் யுவன்தான் இசையமைத்துள்ளார். அதனால் இந்த படத்துக்கு யார் இசையமைக்க போவது என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Fans asking premgi venkat prabhu movie music director

People looking for online information on Naga chaitanya, Premgi Amaren, Yuvan Shankar Raja will find this news story useful.