விக்ரமன் & ஷிவின் கிட்ட நிவாஷினி சொன்ன விஷயம்.. விக்ரமனே சிரிச்சிட்டாரு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Fans asking about Vikraman and shivin says nivashini in BB6
Advertising
>
Advertising

Also Read | அறுவை சிகிச்சையா.? சீரியல் நடிகை ஆல்யா மானசாவுக்கு என்ன ஆச்சு? பரபரப்பு Post!!

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார்.

Fans asking about Vikraman and shivin says nivashini in BB6

இதனிடையே, இந்த வாரம் Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. உதாரணத்திற்கு லுங்கி மாற்றம் பனியன் அணிந்தபடி இருக்க வேண்டும் என்றும், தலை சீவாமல் இருக்க வேண்டும் என்றும் அசீமிடம் பிக் பாஸ் கூறி இருந்தார். இதனால் லுங்கி மற்றும் பனியன் காஸ்டியூம் உடன் வீட்டுக்குள் இருக்கிறார். இந்நிலையில், அமுதவாணனுக்கு ஹேர் ஸ்டைலை மாற்றும்படி சொல்லியிருக்கிறார் பிக்பாஸ். இப்படி அடுத்தடுத்து சுவாரஸ்ய சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ் மற்றும் குயின்சி ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். உள்ளே வந்த உடனேயே அசல் - ADK இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் ஷிவின் விக்ரமனிடம் பேசிய விதம் பற்றியும் அசல் விமர்சித்திருந்தார். அசல் தன்னிடம் பேச பிடிக்கவில்லை என சொல்லியதை கேட்டு கண்கலங்கிய ADK வை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்தனர்.

இந்த சூழ்நிலையில் வீட்டுக்குள் நிவாஷினி வருகைபுரிந்துள்ளார். அவரை அனைவரும் வரவேற்ற நிலையில் கிச்சன் பகுதிக்கு செல்லும் நிவாஷினி விக்ரமன் மற்றும் ஷிவினை அழைத்துச் சென்று பேசுகிறார். அப்போது,"உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். வெளியே போனா, ரசிகர்கள் எல்லாரும் என்கிட்ட வந்து பேசுறாங்க. என்னை பத்தி பேசுனா கூட பரவால்ல. எல்லோரும் உங்களை பத்திதான் கேக்குறாங்க. அவங்க வின் பண்ணனும். நாங்க வாழ்த்து சொன்னோம்னு சொல்லுங்கன்னு சொன்னாங்க. அத உங்க கிட்ட சொல்லிட்டேன்" என்கிறார்.

அப்போது ஷிவின்,"சில விஷயங்களை சொல்லவே கூடாது" என சிரிக்கிறார். அப்போது அங்கு வரும் சாந்தி,"அதெல்லாம் சொல்ல கூடாது. பிக்பாஸ் எதாவது சொல்லப்போறாரு" எனச் சொல்ல "ஆமால்ல" எனக் கூறியபடி அங்கிருந்து செல்கிறார். இதனை கேட்டுக்கொண்டிருந்த விக்ரமன் சிரித்தபடி நிற்கிறார்.

Also Read | சும்மாவா அவரை வாத்தி-ன்னு சொல்றாங்க.. ADK-க்கு விக்ரமன் கொடுத்த Life அட்வைஸ்.!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Fans asking about Vikraman and shivin says nivashini in BB6

People looking for online information on Bigg Boss Tamil 6, Nivashini, Shivin, Vijay tv, Vikraman will find this news story useful.