பிக்பாஸ் போட்டியில் கமல் செய்த செயலுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 100 நாட்களை வெற்றிகரமான முடித்து நிறைவடைந்துள்ளது. இதில் நடிகர் ஆரி அர்ஜுனா வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாலா ரன்னராக அறிவிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து பிக்பாஸ் குறித்து பல்வேறு பதிவுகள் இணையத்தில் உலாவி வருகின்றன. அதில் குறிப்பாக கமல் செய்த செயல் ரசிகர்களிடையே பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், போட்டியின் நடுவே சில புத்தகங்களையும் ரசிகர்களுக்கு பரிந்துரைத்தபடி இருந்தார். அவர் சொன்ன புத்தகங்களை சிலர் வாங்கி படிக்கவும் செய்தனர்.
இந்நிலையில் கமல் போட்டியில் பரிந்துரைத்த ''செல்வேந்திரன் எழுதிய வாசிப்பது எப்படி'' என்ற புத்தகம், அவர் சொன்ன 2 மணி நேரத்தில் 500 பிரதிகளுக்கும் மேல் ஆன்லைன் தளங்களில் விற்பனையாகியுள்ளது.
மேலும் கமல் சொன்ன பல்வேறு புத்தகங்களை ரசிகர்கள் இப்போது ஆர்வமாக வாங்கி வருவதாகவும், அப்புத்தகங்களின் டிமான்ட் அதிகரித்திருப்பதால், அவை மீண்டும் மறுபதிப்பு செய்யப்பட்டு வருவதாகவும் சில தெரிவிக்கின்றனர்.
பொழுது போக்கு நிகழ்ச்சி என்று நில்லாமல், அதில் சமூகத்திற்காக நல்ல புத்தகங்களையும் பரிந்துரைத்த கமலின் செயலுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.