KEERTHI SURESH : "இப்பதான் பாக்குறேன்".. ரசிகர் வரைந்த ஓவியத்தில் கீர்த்தி சுரேஷ் கையில் 'V'..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேச்சுரல் ஸ்டார் நடிகர் நானியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் 'தசரா'. நானியின் ஃபர்ஸ்ட் லுக்கில் தொடங்கி சமீபத்தில் வெளியான  டீஸர் வரை நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி உள்ளது.

Advertising
>
Advertising

ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் பேனரின் கீழ் சுதாகர் செருக்குரி தயாரிக்கும் இப்படத்தின் மூலம் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குனராக அறிமுகமாகிறார். சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் நடித்துள்ளனர். நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளையொட்டி, அவரது கேரக்டர் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண்ணாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தசரா திரைப்படம் 30 மார்ச் 2023 அன்று தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது. சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடல், ஷாம்கீலா அங்கீலீசி பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் தமிழில் மைனர் வேட்டி கட்டி என்ற பெயரில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் ஓவியத்தை ரசிகர் ஒருவர் வரைந்துள்ளார். அதை பகிர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ், அந்த ஓவியத்தில் தனது கைகளில் இருந்த V எனும் ஆங்கில லெட்டரை தாமதமாகவே கவனித்ததாக குறிப்பிட்டு நன்றி சொல்லி பகிர்ந்துள்ளார்.

தற்போது நானி - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் திரையரங்கில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தசரா திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், வெண்ணிலா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளா என்பது இந்த கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Fan painted Keerthi Suresh with the Letter V in her hand

People looking for online information on Dasara, Keerthi Suresh, Nani will find this news story useful.