பிரபல டிவி சேனல் சீரியலில் அதிரடி மாற்றம்!.. இனி நாயகியாக நடிக்கப்போவது இவர் தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெகுஜன மக்களை ஈர்க்கும் சுவாரஸ்யமான தொலைக்காட்சி பொழுதுபோக்கு வடிவங்களில் ஒன்று தான் சீரியல்கள்.

என்னதான் கேம் ஷோக்கள், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் டிவியின் பல வகையான பொழுதுபோக்குகள் காலப்போக்கில் வெளிவந்தாலும், சீரியல்கள் இன்னும் அவை அனைத்திலும் முதனையாக நின்று ஆதிக்கம் செலுத்துகின்றன. காரணம் சீரியல் கதைகளும் கதாபாத்திரங்களும் உறவுகளும் என்னதான் டிராமாவாக சொல்லப்பட்டாலும் அவை வெகுஜன மக்களின் வாழ்க்கையோடு ஒரு தொடர்பில் இருக்கின்றன.

இதனிடையே பிரபல சன் டிவி சீரியல் கதாநாயகி திடீரென மாற்றம் அடைந்துள்ள நிகழ்வு அதிர்ச்சியையும் அதே சமயம் அவருக்கு பதிலாக அதே கதாபாத்திரத்தில் புதிதாக நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடையே ஒருசேர உருவாக்கியுள்ளது.

ஒரு சீரியலின் முக்கிய வெற்றி அதன் சுவாரஸ்யமான கதைக்களம், வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் ஈர்க்கக்கூடிய ஸ்கிரிப்ட் ஆகும். ஒவ்வொரு சேனலுக்கும் இப்படி அவற்றின் சொந்தமான தொடர்கள் பிரபலமாக உள்ளன.  அப்படியான பிரபல சன் டிவி சீரியல் தான் மகராசி. கடந்த 21-ஆம் தேதி அக்டோபர் 2019 அன்று சன் டிவியில் திரையிடப்பட்ட இந்த சீரியலை சிட்ரம் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

இந்நிலையில் தான் இந்த சீரியலின் முன்னணி கதாநாயகியாக சமீபத்தில் வரை, அதாவது 413 வது எபிசோட் வரை இருந்த நாயகி திவ்யா ஸ்ரீதர் இப்போது மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக, ​​சன் டிவியின் பிரபலமான கல்யாண பாரிசு 2 புகழ் ஸ்ரீதிகா சனீஷ் , மகராசியின் பாரதி புவியரசன் கேரக்டரில் (முன்பாக திவ்யா ஸ்ரீதர் நடித்து வந்த கேரக்டர்) நடிக்கவுள்ளார்.

இதுபற்றி நடிகை ஸ்ரீதிகா சனீஷ், மகராசி சீரியலில், அணியில் தான் இணைந்துள்ளதாக விளக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். மேலும் நிகழ்ச்சியின் தலைப்பு பாடலையும் பாடியுள்ளார்.  மேலும் இவரைக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய மகராசி சீரியலின் போஸ்டரும் தற்போது ப்ரோமோவாக பகிரப்பட்டு வருகிறது.

ALSO READ: சல்யூட் அடிக்க வைக்கும் அறிவிப்பு!!.. முதல்வருக்கு நன்றி சொல்லி 'மாநாடு' தயாரிப்பாளர் பரபரப்பு ட்வீட்!!

தொடர்புடைய இணைப்புகள்

Famous suntv serial heroine change srithika to join as lead

People looking for online information on Magaraasi, Srithika saneesh, Sun TV, Tv Serial will find this news story useful.