பிரபல பாடகிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.! ''இப்படிதான் வந்ததாம்..!"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாப் இசை பாடகி மற்றும் நடிகையான ஸ்மிதாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. 

தெலுங்கு மொழியில் பாடகியாக பிரபலமானவர் ஸ்மிதா. இவர் பல பாப் இசை ஆல்பங்கள் மற்றும் திரைப்படங்களிலும் பாடியுள்ளார். தமிழிலும் இவர் பாடிய இஞ்சி இடுப்பழகா உள்ளிட்ட ஆல்பம் பாடல்கள்., 90-ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பாடல்களாக கொண்டாடப்பட்டவை. மேலும் இவர் திரைப்படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். 

இந்நிலையில் தற்போது ஸ்மிதா தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது குறித்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், ''மிகவும் மோசமான நாள் நேற்று. கொஞ்சம் உடல்வலி இருந்ததால் டெஸ்ட் எடுத்து பார்த்தேன். எனக்கும் எனது கணவரக்கும் கொரோனா வைரஸ் பாசிட்டீவ் என வந்திருக்கிறது. நாங்கள் வீட்டில் பாதுகாப்பாக தான் இருந்தோம். ஆனால், வெளியில் இருந்து லைட் சரி செய்ய ஒருவர் வந்தார். அவர் தற்போது மருத்துவமனையில் இருக்கிறார். ஒருவேளை அவர் மூலம்தான் இது பரவி இருக்கலாம். விரைவில் கொரோனாவை வென்று வருவோம்'' என நம்பிக்கையாக பதிவிட்டுள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிரபல பாடகிக்கு கொரோனா வைரஸ் பாசிட்டீவ் | Famous Singer and Actress Smita Pop tested COVID Positive

People looking for online information on Covid 19, Smita, Smita Pop will find this news story useful.