மலையாள திரைப்படங்களில் தனது திரை வாழ்வை தொடங்கி, பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான்.
சமீபத்தில் தனது 35 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதனை முன்னிட்டு அவர் அடுத்து நடிக்க போகும் படங்களின் போஸ்டர்கள் வெளிவந்தன.
குறிப்பாக பெயரிடப்படாத தெலுங்கு படத்தில் லெப்டினன்ட் ராம் எனும் ராணுவ வீரர் வேடத்தில் நடிக்கிறார், இந்த படத்தை ஹனு ராகவபுடி இயக்குகிறார் . கீர்த்தி சுரேஷின் 'மகாநதி' படத்தில் ஜெமினி கணேசனாக நடித்த பிறகு தெலுங்கில் துல்கரின் இரண்டாவது படம் இதுவாகும். மிருனாள் தாகூர் ஜோடியாக நடிக்கிறார். ஓதிரம் கடக்கம், கிங் ஆப் கோத்தா போன்ற படங்களின் முதல் லுக் போஸ்டரும் அன்று வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
அதே வேளையில் துல்கர் சல்மான் திருடனாக நடித்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாழ்க்கை வரலாற்று கிரைம் த்ரில்லர் படமான 'குருப்' வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய், சோபிதா துலிபாலா, இந்திரஜித் சுகுமாரன், சன்னி வெய்ன், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் நடித்துள்ளனர். இது போக போலிசாக நடித்த மலையாள ஆக்ஷன் த்ரில்லர் 'சல்யூட்' மற்றும் தமிழ் படமான 'ஹே சினாமிகா' ஆகியவை அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இந்நிலையில் துல்கர் சல்மான் விலையுயர்ந்த சொகுசு காரான Mercedes-AMG G 63 FL-யை வாங்கியுள்ளார். இதை அந்த கார் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்ப்பூர்வமாக தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த கார் இந்திய மதிப்பில் சுமார் 2.50 கோடியாகும். 96 லிட்டர் பெட்ரொல் கொள்ளவுடன் 8 கிலோமீட்டர் மைலேஜில் மணிக்கு 220 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். வெறும் 5 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை அடையும். மேலும் இந்த வாகனம் குண்டு துளைக்காத Bullet Proofing செய்யப்பட்டது.
துல்கர் சல்மான் திரையுலகுக்கு வருவதற்கு முன்பே கார் விற்பனை தொழில் செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.