"டான்" படத்தின் டப்பிங்கை முடித்த பிரபல காமெடி நடிகர்! வேற லெவல் மாஸ் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் (Doctor) திரைப்படம் படம் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த டாக்டர் திரைப்படம்.

Advertising
>
Advertising

'டாக்டர்' படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'டான்'. பொள்ளாச்சி, ஆக்ரா, சென்னையில் இந்த பட படப்பிடிப்பு நடைப்பெற்றது. இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.  இவர்களுடன் S J சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

சில தினங்களுக்கு முன் டான் படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. சில நாட்களுக்கு முன் நடிகர் S J சூர்யா, நடிகர் சூரி, நடிகர் சிவகார்த்திகேயன் ஆகிய நடிகர்கள் தாங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடித்துள்ளனர், என  டிவிட்டர் பக்கத்தில் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இச்சமயத்தில் காமெடி நடிகர் பாலசரவணன் டான் படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடித்துள்ளதாக டிவிட்டரில் அறிவித்துள்ளர்.

தொடர்புடைய இணைப்புகள்

Famous comedy actor bala saravanan finished his dubbing for don

People looking for online information on Bala Saravanan, Don will find this news story useful.