இலங்கையை சார்ந்த நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் பாலிவுட் படங்களில் நடித்து இந்தியா - இலங்கையில் கவனிக்க தக்க நடிகையாக வலம் வருபவர்.
பெங்களூரை சார்ந்த சுகேஷ் சந்திரசேகர் எனும் நபர் அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்களை ஏமாற்றியும், பலருக்கு வேலை வாங்கி தருவதாகவும் மோசடி செய்த வழக்கில் கைதாகி உள்ளார். இதுவரை ரூ.200 கோடி மோசடி செய்து இருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுகேஷ் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் தற்போது சோதனை நடத்தி, ரொக்கம், தங்கம், விலை உயர்ந்த சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர்.
அவருடைய பங்களாவுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதில் அவர் காதலி லீனா மரியாபாலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தனர். இந்த வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சாட்சியமாக சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜாக்குலினும் சுகேஷும் நான்கு முறை சென்னையில் சந்தித்துள்ளனர்.
சென்னைக்கு வர தனி விமானத்தை சுகேஷ், நடிகை ஜாக்குலினுக்கு ஏற்பாடு செய்ததாகவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில மாதம் முன் சுகேஷ் சந்திரசேகருக்கு நடிகை ஜாக்குலின் படுக்கையறையில் முத்தம் கொடுக்கும் செல்பி புகைப்படம் வெளியாகி இந்தி திரையுலகில் பரபரப்பை கிளப்பியது.
இச்சூழலில் மேலும் ஒரு புகைப்படம் லீக் ஆகி உள்ளது, நடிகை ஜாக்குலினுக்கு படுக்கையில் தரகர் சுரேஷ் முத்தம் கொடுக்கும் புகைப்படம் வைரலாகி பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது. சில நாட்களுக்கு முன் சுகேஷ் சந்திரசேகரின் வழக்கறிஞர் ஆனந்த் மாலிக், ஜாக்குலின் பெர்னாண்டஸும் சுகேஷும் காதலித்து வந்தனர் என கூறியிருந்தார். இதை ஜாக்குலின் வழக்கறிஞர் மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017-ம் ஆண்டு அ.தி.மு.க. பிளவுப்பட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டி.டி.வி. தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறி டெல்லி குற்றவியல் போலீசார் டி.டி.வி.தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜுன், இப்போது செய்திகளில் அடிபடும் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரை கைது செய்தததும் இங்கு குறிப்பிடத்தக்கது.