அண்ணாத்த படத்தின் டப்பிங்கை முடித்த வில்லன் நடிகர்! இவர் தான் படத்துல வில்லனோ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் அண்ணாத்த படத்தை தயாரிக்கிறது.

famous actor finished his dubbing for Annaatthe

ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், வேல. ராம மூர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் இயக்குனராக விஸ்வாசம், வேதாளம், வீரம், விவேகம், சிறுத்தை பட இயக்குனர் சிவாவும், ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், இசையமைப்பாளராக இமானும், எடிட்டராக ரூபனும் பணிபுரிகின்றனர்.

famous actor finished his dubbing for Annaatthe

இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை, லக்னோ, கொல்கத்தா பகுதிகளில் நடந்து முடிந்து, தற்போது இந்த படத்தின் Post Production வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.  அண்ணாத்த படத்தின் முதல் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர், சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

அதனைத்தொடர்ந்து படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகர் ஜகபதி பாபு டிவிட்டரில் இயக்குனர் சிவாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து படத்தின் தமிழ்-தெலுங்கு டப்பிங்கை முடித்து விட்டதாக அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே இயக்குனர் சிவா இயக்கிய விஸ்வாசம் படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

அண்ணாத்த படத்தின் டப்பிங்கை முடித்த வில்லன் நடிகர்! இவர் தான் படத்துல வில்லனோ? வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Famous actor finished his dubbing for Annaatthe

People looking for online information on Jagapathi Babu, Rajinikanth, Siruthai Siva, Siva will find this news story useful.