பிரபல குணச்சித்திர நடிகர் காலமானார்.! - முன்னணி ஹீரோ தகவல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல குணச்சித்திர நடிகர் காலமாகியிருப்பதாக நடிகர் பிருத்விராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மலையாள சினிமாவில் குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவர் அனில் முரளி. இவர் சுமார் 200 படங்களுக்கு மேலாக நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் சினிமாவில் நிமிர்ந்து நில், அப்பா, கொடி, தனி ஒருவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 

இந்நிலையில் நடிகர் அனில் முரளி இயற்கை எய்திவிட்டதாக, மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோ பிருத்விராஜ் பதிவிட்டுள்ளார். நீண்ட நாட்களாக கல்லீரல் பிரச்சனைக்கு ட்ரீட்மென்ட் எடுத்து வந்த அனில் முரளி, உடல்நிலை சரியின்றி இன்று இயற்கை எய்தியுள்ளார். இதை தொடர்ந்து நடிகர் நிவின் பாலி உள்ளிட்ட மலையாள சினிமா நட்சத்திரங்களும், திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

நடிகர் அனில் முரளி காலமானார் | Famous Actor Anil Murali Passes Away and turns industry shock

People looking for online information on Anil Murali, Malayalam Actor, Passed away will find this news story useful.