அமெரிக்காவில் வசித்துவரும் இந்திய குடும்பம் ஒன்று பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தங்களது வீட்டில் சிலை வைத்திருக்கிறது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | COBRA-க்கு சொந்த குரலில் டப்பிங் பேசினாரா இர்பான் பதான்? அவரே சொன்ன EXCLUSIVE தகவல்!
இந்தி திரைப்பட உலகை ஆண்ட மாபெரும் நடிகரான பச்சனுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவரான கோபி சேத், தனக்கு மிகவும் பிடித்த நடிகரான அமிதாப் பச்சனுக்கு தனது புதுவீட்டில் சிலை வைத்திருக்கிறார். இந்த சிலை திறப்பு விழாவை காண ஏராளமான ரசிகர்கள் அவரது வீட்டின் முன்னர் குவிந்திருக்கின்றனர்.
சிலை
அமெரிக்காவில் இணைய பாதுகாப்பு பொறியாளராக பணிபுரிந்து வருகிறார் கோபி. இவரும் இவரது மனைவியும் அமிதாப் பச்சனின் மிகப்பெரும் ரசிகர்கள். இந்நிலையில், அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் புதுவீடு ஒன்றை சமீபத்தில் வாங்கியிருக்கிறார் கோபி. அங்கே பச்சனின் சிலையை வைக்க முடிவெடுத்த கோபி மற்றும் அவரது மனைவி ரிங்கு, இதற்காக 75,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 60 லட்ச ரூபாய்) செலவு செய்திருக்கின்றனர். இந்த சிலை திறப்பு நிகழ்வின் போது, சுமார் 600 ரசிகர்கள் கலந்துகொண்டு ஆர்வத்துடன் சிலையை புகைப்படம் எடுத்துச் சென்றிருக்கின்றனர்.
கடவுள் போன்றவர்
இதுபற்றி பேசிய கோபி,"அவர் (அமிதாப் பச்சன்) எங்களுக்கு கடவுள் போன்றவர். சினிமாவில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் பொதுவெளியில் தன்னை அவர் நிர்வகிக்கும் விதம் மிகவும் ஊக்கமளிக்கக்கூடியது. அவர் தனது ரசிகர்களை நேசிக்கிறார். அதனாலேயே அவரது சிலை எங்களது வீட்டில் இருக்கவேண்டும் என நினைத்தோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் அவர்,"ஆகஸ்ட் 27, சனிக்கிழமையன்று, எடிசன், அமெரிக்காவில் உள்ள எங்கள் புதிய வீட்டின் முன் வெளியில் நடிகர் அமிதாப் பச்சனின் சிலையை வைத்துள்ளோம். திரு.பச்சனின் சிலை திறப்பு விழாவில் ஏராளமான திரு பச்சனின் ரசிகர்கள் கலந்து கொண்டனர்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், நிகழ்வின்போது கிளிக் செய்யப்பட்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருக்கிறார். இந்நிலையில், இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
Also Read | 'நட்சத்திரம் நகர்கிறது' படம் பார்த்த அனுராக் காஷ்யப்.. படம் பற்றி அவரே இட்ட வைரல் பதிவு!