புனித் ராஜ்குமார் விரும்பிய 'கடைசி ஆசை'.. நிறைவேற்றும் குடும்பத்தினர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். பல்வேறு கமர்ஷியல் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். ரசிகர்களால் 'பவர் ஸ்டார்' என்று அழைக்கப்படுகிறார். கன்னட திரையுலகில்  செல்லமாக அப்பு என்று அழைக்கப்பட்டவர். கடந்த அக்டோபர் 29ம் தேதி  உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.

Family fulfilling the last wish of Puneet Rajkumar
Advertising
>
Advertising

உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு கன்னட திரையுலகினரையே கண்ணீரில் ஆழ்த்தியது. தனது எளிமை மற்றும் அன்பால் பலரது உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டவர் புனித். பலவித சமூக நலப்பணிகளில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட புனித் ராஜ்குமார் இந்த வயதில் பிரிந்து செல்ல வேண்டுமா என்பதை பலரும் ஏற்றுக்கொள்ள முடியாத சோகமாகவே இருந்தது.

Family fulfilling the last wish of Puneet Rajkumar

தான் செய்யும் சமூக பணிகளை தனது வீட்டில் இருப்பவர்களுக்கே தெரியாமல் செய்து வந்ததுதான் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. தனது தாய் தந்தையர் போலவே அவரும் அவரது மரணத்திற்குப் பின்னர் அவர் தனது கண்களையும் தானம் செய்து உள்ளார். 26 அனாதை இல்லங்களை தன்னுடைய சொந்த பணத்தில் நடத்தி வந்தது முதல், 45 பள்ளிகளை நடத்தி வந்து அதில் இலவச கல்வி கிடைக்க  உதவியாக இருந்தார்.

அஜித் ரசிகர்களால் இந்த நாளை மறக்க முடியுமா? இயக்குனர் சிறுத்தை சிவா போட்ட வைரல் ட்வீட்!

இப்போது அவரது குடும்பத்தினர் அவரது கடைசி ஆசையை நிறைவேற்றும் பணிகளை முன் எடுத்துள்ளனர். பவர் ஸ்டார்கள் வருவார்கள் போவார்கள், இந்த வெளிச்சம் மறைந்தது குடும்பத்தினருக்கும் மட்டுமல்ல ரசிகர்களுக்குமே பேரிடியாக இருந்துள்ளது.

புனித் ராஜ்குமாரின் கடைசி ஆசை

புனித் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தனது தந்தை ராஜ்குமார் பிறந்த ஊரான காஜனூருக்கு சென்று பாழடைந்த நிலையில் கிடந்த வீடுகளை பார்வையிட்டு, அதனை சீரமைத்து தனது தந்தை பெயரில் நினைவு இல்லம் கட்டவும், அவரது புகழை பரப்ப அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டிருக்கிறார். கல்வி சார்ந்த பணிகளையும் தொடங்க நினைத்துள்ளார்.

குடும்பத்தினரின் செல்லப்பிள்ளை புனித்

தந்தை மனம் போல நல்ல உள்ளம் கொண்ட புனித் ராஜ்குமார் செய்ய நினைத்ததை அவர்களது அண்ணன்களான சிவராஜ் குமார், ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோரும் இணைந்து செய்து முடிக்க முடிவெடுத்துள்ளனர்.  அப்புவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தம்பியின் ஆசையை நிறைவேற்றுவதில் புது உற்சாகம் கிடைத்ததாகவே நினைக்கின்றனர்.

மொத்த உலகத்தயும் பாம் போட்டு அழிச்சுடுங்க! - கொரோனா விசயத்துல கொந்தளித்த விஜய் ஆண்டனி!

Family fulfilling the last wish of Puneet Rajkumar

People looking for online information on பவர் ஸ்டார், புனித் ராஜ்குமார், Family fulfilling, Last wish, Puneet Rajkumar will find this news story useful.