நடிகர் விஷ்ணு விஷால் பெயரில் நடந்த மோசடி.. வழக்குப்பதிவு செய்ய முடிவு. விவரம் என்ன.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார். 

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் ராட்சசன் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க, இவருக்கு ரசிகர்கள் பெருக தொடங்கினர். தற்போது இவர் F.I.R என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவல் பகிர்ந்துள்ளார். அவர் நடிப்பதாக சொல்லி, போலியாக ஒரு படத்திற்கு நடிகர்கள் தேர்வு நடைபெற்று வந்துள்ளது. 

இதுகுறித்த தகவல் அவருக்கு கிடைக்க, ''எனது பெயரை சில தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதை நான் வண்மையாக கண்டிக்கிறேன். எனது தயாரிப்பு நிறுவனத்தை தாண்டி, நான் வேறு எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. விரைவில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்யவுள்ளேன்' என அவர் பதிவிட்டுள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

விஷ்ணு விஷால் பெயரில் மோசடி | fake film audition in the name of popular tamil hero

People looking for online information on Fake Auditions, Vishnu Vishal will find this news story useful.