கூட்டணியே செமயா இருக்கே.. உதயநிதி ஸ்டாலினுக்கு வில்லனாவது யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை:  ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் புது படத்தில், உதயநிதி ஸ்டாலினுக்கு வில்லனாக நடிக்கிறார் ஃபகத் பாசில்.

Advertising
>
Advertising


ஹிட் படங்கள்

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் புது படத்தில் உதயநிதி ஸ்டாலினே நடிக்க உள்ளார். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்தப் படம் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. பல விருதுகளையும் வாங்கிக் குவித்தது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த "கர்ணன்" படமும் சூப்பர் ஹிட் படமானது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும், இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் மாரி செல்வராஜின் அடுத்த படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினுடன் இணைய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பல படங்களை தயாரித்துள்ள நிறுவனமாகும். ஆதவன், ஏழாம் அறிவு, நீர்பறவை, மனிதன் போன்ற படங்களும் இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட படங்களாகும். அந்த படங்கள் அனைத்தும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. தமிழில் தற்போது முன்னணி நடிகராகவும் இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

ஃபகத் பாசில்

மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் கூட்டணி உறுதி என வெளிவந்த நிலையில், இந்த படத்தில் வில்லனாக நடிக்க போகும் ஃபகத் பாசில் பற்றி தான் தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. தற்போது இவர் வில்லனாக நடித்து வெளிவந்து இருக்கும் படம் "புஷ்பா தி ரைஸ்" மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. வசூல்ரீதியாகவும் ஹிட் கொடுத்துக்கொண்டு இருக்கும் படமாக இருக்கிறது. அடுத்து, கமல்ஹாசன் படமான "விக்ரம்" படத்திலும் வில்லனாக மிரட்டுகிறார் ஃபகத் பாசில் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பு

மலையாள சினிமாவில் மிக முக்கியமான ஒரு ஹீரோ மற்றும் குணச்சித்திர நடிகராகவும், பல்வேறு கதாபாத்திரங்கள் செய்துவரும் ஃபகத் பாசில், எந்த திரைபடத்தில் நடித்தாலும் அந்த திரைப்படம் நோட்வர்த்தியான ஒரு படமாக பார்க்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் அந்த கதாபாத்திரத்திற்குண்டான மெனகெடுதல், ஃபகத் பாசிலின் ஸ்பெஷாலிட்டி ஆகும்.  சமீபத்தில் அவர் நடித்த பல படங்கள் விமர்சன ரீதியாகவும் அவருடைய கதாபாத்திரத்தை பற்றி பல ஊடகங்கள் பல கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். இந்தமுறை உதயநிதிக்கு எதிராக வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதால், இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

Who joins with Udhayanidhi as villian in his next film

People looking for online information on FahadFaasil, MariSelvaraj, RedGiantMovies, Udhayanidhistalin will find this news story useful.