இயக்குனர் சுகுமார் இயக்கும் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தள புகைப்படம் வெளியாகி உள்ளது.
புஷ்பா முதல் பாகத்தில் அல்லு அர்ஜூன் லாரி டிரைவராகவும் சந்தனக் கடத்தல் செய்பவராகவும் நடித்திருந்தார். உலகம் முழுவதும் இதன் முதல் பாகம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானபோது, அங்கு மட்டும் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாயை வசூலித்தது.
இந்த படத்தின் கான்செப்ட் டீசர், நாளை ஏப்ரல் 8 நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது. இதற்கான சிறிய க்ளிம்ப்ஸ் நேற்று புதன்கிழமை வெளியானது.
நடிகை ராஷ்மிகா மந்தனா படத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
‘புஷ்பா2’ படத்தில் பகத் பாசில் நடித்துள்ள காட்சிகளும் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஹத் பாசில் & இயக்குனர் சுகுமார் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை படநிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி டிரெண்ட் ஆகி வருகிறது.