பஹத் பாசில் & ரஜிஷா விஜயன் நடித்த 'மலையன்குஞ்சு'.. பிரபல OTT-யில் ரிலீஸ்! எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் பகத் ஃபாசில்.

Advertising
>
Advertising

Also Read | வெளிநாட்டுக்கு சென்ற நடிகை பிரியா பவானி சங்கர்.. அதுவும் இந்த நாட்டுக்கா? ஆஹா! செம்ம PHOTOS

ஒவ்வொரு படத்திலும் மிக மிக வித்தியாசமான கதைக்களம் மற்றும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்கும் பகத் ஃபாசில், கடந்த ஜூன் மாதம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படத்திலும் நடித்திருந்தார்.  விக்ரமைத் தொடர்ந்து, பகத் ஃபாசில் மலையாளத்தில் நடித்துள்ள 'மலையன்குஞ்சு' திரைப்படம் வெளியானது. ஒரு சர்வைவல் திரில்லர் திரைப்படமாக மலையன்குஞ்சு வெளியானது.

கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி, மலையன்குஞ்சு திரைப்படம் திரை அரங்குகளில் வெளியானது. இந்த படத்தினை சஜிமோன் பிரபாகர் இயக்கி உள்ளார். மாலிக் படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன், மலையன்குஞ்சு படத்தின் திரைக்கதையை எழுதி, ஒளிப்பதிவும் செய்துள்ளார். பகத் ஃபாசிலின் தந்தை ஃபாசில் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கடந்த 1992 ஆம் ஆண்டு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த படம் 'யோதா'. மோகன்லால் நடிப்பில், மலையாளத்தில் வெளியாகி இருந்த இந்த திரைப்படத்திற்கு பின்னர், எந்த மலையாள படத்திற்கும் இசையமைக்காமல் இருந்து வந்தார் ஏ.ஆர். ரஹ்மான். இதனைத் தொடர்ந்து, சுமார் 30 ஆண்டுகளுக்கு பின், தற்போது 'மலையன்குஞ்சு' படத்திற்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பகத் ஃபாசிலுடன், ரஜிஷா விஜயன், இந்திரன்ஸ், ஜாஃபர் இடுக்கி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இன்று பஹத் பாசிலின் 40 வது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம், அமேசான் பிரைம் வீடியோவில் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது என போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | பா.ரஞ்சித் இயக்கும் 'நட்சத்திரம் நகர்கிறது'.. வெளியான கலர்ஃபுல்லான முதல் சிங்கிள் பாடல்!

தொடர்புடைய இணைப்புகள்

Fahad Faasil Malayankunju OTT Release Amazon prime video

People looking for online information on Amazon Prime Video, Fahad Fazil, Malayankunju, Malayankunju OTT Release will find this news story useful.