EXCLUSIVE VALIMAI UPDATE: வலிமை படத்தின் முதல் பாடல் எப்போது ரிலிஸ் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித் - எச். வினோத் - போனிகபூர் முதன்முறையாக இணைந்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வெளியானது.

ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. சுமார் 181 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு ரீமேக் செய்யப்பட்டு அதிக வசூல் செய்த திரைப்படமாக உருவெடுத்தது.

பின்னர் இதே கூட்டணி இரண்டாவது முறையாக 'வலிமை' படத்தில் இணைந்தது. கொரோனா முதலாவது மற்றும் இரண்டாவது அலை காரணமாக வலிமை படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறாமல் போனது. ஆகையால் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போனது. இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு வலிமை படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியானது.

'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அடுத்தடுத்து வெளிவந்து ரசிகர்களை குஷிப்படுத்தின.

'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது.

இந்நிலையில் வலிமை படத்தின் அடுத்த அப்டேட் ஆன படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி தற்போது கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகரான தல அஜித் திரையுலகுக்கு வந்து வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதியுடன் 29 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு சினிமா ரசிகர்களும் தல அஜித் ரசிகர்களும் #29YearsOfAJITHISM என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

இந்த 29வது வருடத்தை முன்னிட்டு வலிமை படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'நாங்க வேற மாதிரி' என தொடங்கும் இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா இசையில் விக்னேஷ் சிவன் இந்த பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவே பாடியுள்ளார்.

ஏற்கனவே தல அஜித்தும் யுவன் சங்கர் ராஜாவும் தீனா, பில்லா, ஏகன், மங்காத்தா, பில்லா 2, ஆரம்பம், நேர்கொண்டபார்வை ஆகிய ஏழு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இந்த ஏழு படங்களின் இசையும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

EXCLUSIVE VALIMAI UPDATE: வலிமை படத்தின் முதல் பாடல் எப்போது ரிலிஸ் தெரியுமா? வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Exclusive valimai first single song naanga vera mathiri

People looking for online information on Ajith Kumar, Boney kapoor, H Vinoth, Valimai, Yuvan Shankar Raja will find this news story useful.