விஜய் படத்தை இயக்க போகிறாரா எஸ்.ஜே.சூர்யா..?!! குஷி படத்தின் பார்ட்-2 உருவாகிறதா.?! விவரம் இதுதான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் படத்தின் இயக்குநர் குறித்து பிரத்யேக தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து விஜய் தனது 65-வது படத்தில் நடிக்கிறார். இத்திரைப்படம் தளபதி-65 என்று குறிப்பிடப்படுகிறது. 

இந்நிலையில் விஜய்யின் 65-வது திரைப்படத்தை, கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள நெல்சன் இயக்கவுள்ளார் என அண்மையில் தகவல் வெளியானது. 

இதனிடையே, விஜய்யின் அடுத்தப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்க போகிறார் எனவும் சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டது. மேலும் இத்திரைப்படம் குஷி படத்தின் இரண்டாம் பாகம் எனவும் கூறப்பட்டது. 

இதை தொடர்ந்து, நமது நெருங்கிய கோலிவுட் வட்டாரங்களில் விசாரித்த போது, விஜய்-எஸ்.ஜே.சூர்யா இணைவதாக வரும் செய்திகள் முற்றிலும் ஒரு வதந்தியே என தகவல் கிடைத்துள்ளது. விஜய்யின் அடுத்த திரைப்படத்தை நெல்சனே இயக்கவுள்ளதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் பட இயக்குநர் பற்றி தகவல் | exclusive update on vijay's thalapathy 65 director

People looking for online information on Nelson Dilipkumar, Sj suryah, Thalapathy 65, Vijay will find this news story useful.