ஆர்யா நடிப்பில் சார்பேட்டா.. 'கையில் எம்.ஜி.ஆர் போட்டோ.. 80-ஸ் காஸ்ட்யூம்' - வேற லெவல் EXCLUSIVE PHOTOS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்யா நடிப்பில் உருவாகும் சார்பேட்டா திரைப்படத்தில் இருந்து புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் திரைப்படம் சார்பேட்டா. வடச்சென்னையின் பாக்சிங்கை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகிறது. இதில் கலையரசன், சஞ்சனா நடராஜன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

நேற்று வெளியான சார்பேட்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் தற்போது படத்தில் இருந்து புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 80-ஸ் காஸ்ட்யூமுடன், கையில் எம்.ஜி.ஆர் படம் வைத்து கொண்டு இருக்கும் புதிய ஸ்டில்ஸ் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் இந்த புகைப்படங்களை பகிர்ந்த நடிகர் ஆர்யா, ஃபர்ஸ்ட் லுக்குக்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த போட்டோஸ் இணையத்தில் இப்போது வைரல் ஆகி வருகிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

சார்பேட்டா படத்தின் புதிய ஸ்டில்ஸ் | exclusive stills from arya pa ranjith sarpetta

People looking for online information on Arya, Pa Ranjith, Sarpetta, Sarpetta Stills will find this news story useful.