BREAKING : விஜய் சேதுபதியின் முத்தைய்யா முரளிதரன் BIOPIC.. செம மாஸ்-ஆ ஒரு அப்டேட்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி நடிக்கும் முத்தைய்யா முரளிதரனின் பயோபிக் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது விஜய்யுடன் மாஸ்டர், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளீர், மாமனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் கிரிக்கெட் வீரர் முத்தைய்யா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடித்துள்ளார். 

இந்நிலையில் தற்போது முத்தைய்யா முரளிதரனின் பயோபிக் குறித்து செம தகவல் கிடைத்துள்ளது. முரளிதரன் எடுத்த விக்கெட் சாதனையை குறிக்கும் விதத்தில் 800 என பெயரிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இத்துடன் மோஷன் போஸ்டரும் வெளியாகும் எனவும் நமது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் ஶ்ரீபதி இயக்கும் இத்திரைப்படத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் கிரிக்கெட் மற்றும் சினிமா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் சேதுபதியின் முத்தைய்யா முரளிதரன் படம் | Exclusive news on vijay sethupathi's muttiah muralitharan biopic

People looking for online information on Muttaih Muralitharan, Vijay Sethupathi will find this news story useful.