தனுஷ் நடிப்பில் ஹாலிவுட் படம்.. அடுத்தடுத்த ப்ளான்ஸ் இதுதான்!!! அதற்கு முன்பு இந்த படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் திரைப்படம் குறித்து செம மாஸ் தகவல் தெரிய வந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் பிசியான ஹீரோவாக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ஜகமே தந்திரம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.

மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடிக்கும் இவர், இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்திலும் கார்த்திக் நரேன் இயக்கத்திலும் நடிக்கிறார். மேலும் ராட்சசன் இயக்குநர் ராம்குமாருடன் தனுஷ் இணையவுள்ளதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ஹாலிவுட்டில் அவேன்ஜர்ஸ் இயக்குநர்கள் இயக்கவுள்ள தி கிரே மேன் படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் குறித்து பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது. 

வரும் பிப்ரவரி 8-ஆம் தேதியோடு கார்த்திக் நரேன் இயக்கும் D43 படத்தின் முதல் ஷெட்யூலை முடிக்கும் தனுஷ், அதை தொடர்ந்து 9-ஆம் தேதி அமெரிக்காவுக்கு பறக்கிறார். அடுத்த இரண்டு மாதங்களுக்கு அமெரிக்காவில் தி கிரே மேன் பட ஷூட்டிங் நடப்பதாகவும் கூறப்படுகிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் பட தகவல் | Exclusive news on dhanush next the gray man shooting detais

People looking for online information on Dhanush, The Gray Man will find this news story useful.