சூரரைப் போற்று திரைப்படத்தின் இன்ஸ்பிரேஷன் ஜி.ஆர்.கோபிநாத் நம்மிடம் பல விஷயங்களை மனம் திறந்து பேசினார்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அபர்னா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். விமான சேவை நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி உருவாகியுள்ள இத்திரைப்படம் நேரடியாக அமேசானில் அக்டோபர் 30 அன்று வெளியாகிறது.
இந்நிலையில் விமான சேவை நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் நம்மிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது அவர் சூர்யாவை சந்தித்த நிகழ்வு குறித்தும் பகிர்ந்து கொண்டார். ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை புத்தகத்தை படித்துள்ள சூர்யா, அவரை கண்ட போது பிரமிப்புடன் அரை மணி நேரம் பேசினாராம். மேலும் இந்த படத்தை சிறப்பாக செய்ய, ஒரே ஒரு Thumbs Up மட்டும் கொடுங்கள் என்று கேட்டாரம் சூர்யா.
சூரரைப் போற்று திரைப்படம் குறித்து, தனது வாழ்க்கையில் சாதித்தது குறித்து ஜி.ஆர்.கோபிநாத் பேசிய முழு வீடியோ இதோ.