EXCLUSIVE : "GUNDUMALLI "சாந்தனு உங்கள SIGHT அடிச்சத பாத்தீங்களா? MAHIMA அசத்தல் பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : குண்டுமல்லி பாடல் குழுவினர் நடிகர் சாந்தனு, மகிமா, ஆதவ் கண்ணதாசன் மற்றும் இசையமைப்பாளர் ஜெரால்ட் பெலிக்ஸ் ஆகியோர் ஒரு நேர்காணலில் கலந்துகொண்டு கலகலப்பாக பதிலளித்துள்ளனர்.

Advertising
>
Advertising

நடிகர் சாந்தனு மற்றும் மகிமா நடிப்பில் வெளியான குண்டுமல்லி என்ற ஆல்பம் பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

விளையாட்டு:

இந்நிலையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் பாட்டில் விளையாட்டு ஒன்றை தொடங்கினார். அதில் பாட்டிலை தூக்கி போட வேண்டும். அது நேராக இல்லாமல் கீழே விழுந்தால், அருகில் உள்ளவர் பாட்டிலை தூக்கிப் போட்ட வரை பற்றிய உண்மையை கூற வேண்டும்.

நாம் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருந்தா.. சமந்தா போட்ட வைரல் பதிவு!

 

ஆனந்தி To மகிமா:

                       நடிகர் சாந்தனு முதலில் நேராக தூக்கி போட்டு விட்டார். ஆனால் அது செல்லாது என்று அறிவித்து. அதன்பின் ஆதவ் கண்ணதாசன் தூக்கி போட்டார். அது நேராக விழ வில்லை. அதனால் சாந்தனு அவரைப்பற்றிய கேள்வியை கேட்டார், அதில் இந்தப் பாடலுக்கு மகிமாவை தேர்வு செய்யவில்லை என்றால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டார். அதற்கு கயல் ஆனந்தியை தேர்வு செய்து இருப்பேன் என ஆதவ் கண்ணதாசன் கூறினார். ஏன் கயல் ஆனந்தியை தேர்வு செய்யாமல் மகிமை தேர்வு செய்தீர்கள் என்று கேட்டதற்கு நீங்கதான் தேர்வு செய்ய சொன்னீர்கள் என கலகலப்பாக பதிலளித்தார்.

2021இல் விவாகரத்து செய்து கொண்ட திரை பிரபலங்கள் !

 


ஊரடங்கில் ஒரு காதல்:

                இசையமைப்பாளர் ஜெரால்ட் பெலிக்ஸ் பாட்டிலை தூக்கிப் போடும் போது அதுவும் கீழே விழுந்ததால் அவரிடம் இயக்குனர் ஆதவ் கண்ணதாசன் உங்கள் மனைவிக்கு நீங்கள் Normal-ஆ இசை அமைத்து Impress பண்ணுவீங்களா இல்ல அதற்கென்று தனித்துவமான பாடல்கள் அமைத்து Impresse பண்ணுவீங்களா என்று கேட்டார். அதற்கு ஜெரால்ட் நான் ஊரடங்கில் ஒரு காதல் என்ற ஆல்பம் பாடலையே உருவாக்கினேன் எனக் கூறினார்.


மகிமா-வை Sight அடிப்பிங்களா:

                     அதன்பின் நடிகை மகிமா பாட்டிலை தூக்கிப் போடும் போது அதுவும் கீழே விழுந்ததால், ஆதவ் கண்ணதாசன் மகிமா- விடம் உங்களை சாந்தனு சைட் அடிக்கும் போது நீங்க பார்த்திருக்கீங்களா, எனக் கேள்வி கேட்டார். அதற்கு அவரும் இல்லை என சிரித்துக்கொண்டே கூறினார். இது போல் கலகலப்பாக சென்ற நேர்காணலை முழுவதும் பார்க்க, கீழே இணைக்கபட்டுள்ள  வீடியோவை பார்க்கவும்.

EXCLUSIVE : "GUNDUMALLI "சாந்தனு உங்கள SIGHT அடிச்சத பாத்தீங்களா? MAHIMA அசத்தல் பதில்! வீடியோ

Exclusive Gundumalli team fun filled Answers

People looking for online information on ஆதவ் கண்ணதாசன், குண்டுமல்லி, சாந்தனு, ஜெரால்ட் பெலிக்ஸ், மகிமா, Gundumalli, Mahima Nambiar, Shanthnu will find this news story useful.