ஏப்ரல் மாதத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ள படங்கள் பற்றிய ஒரு பார்வை..
திடீர் சந்திப்பு… தலையில் கைவைத்து இயக்குனர் ஷங்கரை ஆசிர்வதித்த தயாரிப்பாளர் - viral pic!
மன்மத லீலை – ஏப்ரல் 1
மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட் மற்றும் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் மன்மத லீலை திரைப்படம் ஏப்ரல் 1 (இன்று) ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் டிரைலர் மற்றும் முதல் சிங்கிள் பாடல் ஆகியவை வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. இளைஞர்களை முழுக்க முழுக்க கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தில் ஆபாசமாக எதுவும் இருக்காது அனைவரும் ரசித்துப் பார்க்கும் விதமாக இந்த படம் இருக்கும் என இயக்குனர் வெங்கட்பிரபு உறுதி அளித்துள்ளார்.
செல்ஃபி –ஏப்ரல் 1
ஜிவி பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர் மதிமாறன் இயக்கியுள்ள திரைப்படம் செல்ஃபி. கல்லூரிகளில் முறைகேடாக சீட் பெற்றுத்தரும் குற்றப்பின்னணியை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. படத்தின் டிரைலர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. இந்நிலையில் இன்று இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. தொடர்ந்து ஜி வி பிரகாஷ் நடிக்கும் படங்கள் கவனம் பெற்று வரும் நிலையில் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
பீஸ்ட் ஏப்ரல் 13…
நடிகர் விஜய், மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து நடிக்கும் பீஸ்ட் படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெட்டின்ஸ் கிங்ஸ்லே மற்றும் அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே இந்த படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அனிருத் இசையில் வெளியான அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய இரண்டு பாடல்களும் வைரல் ஹிட் ஆகியுள்ளன. நாளை வெளியாக உள்ள இந்த படத்தின் டிரைலருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஏப்ரல் 13 ஆம் தேதி ஐந்து மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக ‘பீஸ்ட்’ உலகமெங்கும் வெளியாகிறது. ஏப்ரல் மாத ரிலீஸீல் விஜய் ரசிகர்களின் வெறித்தன வெயிட்டிங் பீஸ்ட் படத்துக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கேஜிஎப் 2 – ஏப்ரல் 14
KGF முதல் பாகத்தின் அசுர வெற்றிக்குப் பிறகு பிரம்மாண்டமாக கேஜிஎப் 2 உருவாகியுள்ளது. இந்த படத்தில் யாஷுடன் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். ரவி பஸ்ரூர் இசையமைக்க, புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் சண்டை காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டரகள் அன்பறிவ் இயக்கி உள்ளனர். முதல் பாகத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் விஜய் கிரகண்டூர் இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரித்துள்ளார். முதல் பாகத்தில் இல்லாத சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் ஆகியோர் இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளனர். இந்த படம் பேன் இந்தியா ரிலீஸாக ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ஒரே நாளில் 109 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்தது. ஏப்ரல் மாதம் வெளியாகும் படங்களில் இந்தியா முழுக்க எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள படமாக கேஜிஎப் 2 உள்ளது. அதனால் இந்த படத்துக்கு ரசிகர்கள் வெயிட்டிங் மோடில் இருக்கின்றனர்.
காத்துவாக்குல ரெண்டு காதல் - ஏப்ரல் 28
நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி இணையும் படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்". இந்த படத்தில் கூடுதலாக சமந்தா காதீஜா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. லலித் குமார் தயாரிப்பில் முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன் தன்னுடைய ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரித்துள்ளார். ஏப்ரல் 28 அன்று இந்த படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் சம்மந்தமாக இதுவரை வெளியான போஸ்டர்கள் அனைத்தும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும் இந்த படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிறவைத்துள்ளன. டீசரில் விஜய் சேதுபதி சமந்தா மற்றும் நயன்தாரா ஆகிய இருவரிடம் பேசும் காட்சி இப்போது பிரபலமான மீம் டெம்ப்ளேட் ஆகியுள்ளது.
டாணாக்காரன் - ஏப்ரல் 11
விக்ரம் பிரபு நடிப்பில் எஸ் ஆர் பிரபுவின் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம நிறுவனம் டாணாக்காரன் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் காவல்துறை பயிற்சி பள்ளியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள தமிழ் அரசன் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்பீம் மற்றும் அசுரன் ஆகிய படங்களில் நடிகராகவும் தமிழ் அரசன் கவனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் லால், எம்.எஸ். பாஸ்கர், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். மகேஷ்மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.
பீஸ்ட் செட்டில் இருந்து முதல்முறை வெளியான யோகிபாபுவின் வைரல் BTS புகைப்படம்!