வாவ்.. ‘தல’ போலவே.. களத்துல குதிச்ச சமந்தா.. என்ன பண்ணிருக்காங்க பாருங்க! VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி திரைப்படம் மூலம் பிரபலமானவர்.

everyday inspiration samantha cycling ride video

தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் முக்கிய கேமியோ ரோலில் நடித்த சமந்தா, விஜய் நடித்த தெறி, கத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

everyday inspiration samantha cycling ride video

முன்னணி நடிகர்களின் படத்திலும், முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடித்த சமந்தா தெலுங்கில் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனார். தெலுங்கில் நாக சைதன்யாவுடன் இணைந்து சில திரைப்படங்களில் நடித்த சமந்தா நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களிடையே உறவுச் சிக்கல்கள் இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. இதற்கு வெவ்வேறு சூழல்களில் இப்படியான வதந்திகள் குறித்து இவர்கள் இருவருமே மறைமுகமாக மறுத்து பேசியும் உள்ளனர்.‌

everyday inspiration samantha cycling ride video

இதனிடையே சம்பந்தா ‘சகுந்தலம்’ என்கிற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். தவிர, தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் சமந்தா நடித்து இருக்கிறார்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் இருந்து டூ டூ டூ என்கிற பாடல் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில்தான் சமந்தா சைக்கிளிங் செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் தல அஜித் போலவே சமந்தாவும் சைக்கிளிங்கில் ஆர்வமாக இருப்பதை குறிப்பிட்டு பேசி வருகின்றனர்.

முன்னதாக தல அஜித் தன்னுடைய நண்பர்களுடன் சைக்கிளிங் சென்று வந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகியிருந்தன.

தற்போது வலிமை படத்தில் நடித்திருக்கும் அஜித் பைக் ரேஸராக மிரட்டியிருக்கிறார். இந்த சாகச காட்சிகளை அண்மையில் வெளியான வலிமை கிளிம்ப்ஸில் காணமுடிந்தது.

இந்நிலையில் மழை நேரம் ஒன்றில் தம்முடைய நண்பர்கள் சூழ, சமந்தா சைக்கிள் ரைடிங் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. நடிகை சமந்தா நண்பர்களுடன் ஜாலியாக மழையில் நனைந்தபடி சைக்கிளில் செல்லும் இந்த வீடியோவை பார்த்த பலரும் பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர்.

இந்த வீடியோவை தம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்த சமந்தா, தினமும் தனது இன்ஸ்பிரேஷன் என்று கேப்ஷனில் குறிப்பிட்டிருக்கிறார்.

Also Read: “இதெல்லாம் எங்க Start ஆச்சுனு தெரில”..  Rumours குறித்து முதல் முறை மனம் திறந்த சமந்தா.. பரபரப்பு Video!

வாவ்.. ‘தல’ போலவே.. களத்துல குதிச்ச சமந்தா.. என்ன பண்ணிருக்காங்க பாருங்க! VIDEO வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Everyday inspiration samantha cycling ride video

People looking for online information on Ajith Kumar, Samantha, Samantha ruth prabhu will find this news story useful.