LATEST: 8 தோட்டாக்கள் பட ஹீரோ வெற்றியின் அடுத்தப்படம் எது தெரியுமா? சூப்பரான அப்டேட்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எட்டு தோட்டாக்கள் படத்தில் அறிமுகமான வெற்றி இப்படத்தின் ஹீரோவாகவும்.  உறியடி 2 வில் அறிமுகமான விஷ்மியா இப்படத்தின் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர்.

பெயரிடப்படாத இந்த திரைப்படம் PRENISS INTERNATIONAL (OPC) PVT LIMITED  தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சேலம் பிரேம்நாத் சிதம்பரம் தயாரிக்கும் 4 வது திரைப்படமாக ஜுலை 14 பூஜையுடன் தொடங்கி 25 நாட்களாக ஆவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

வித்யா ப்ரிதிப், ஜீவா ரவி, தங்கதுரை, ஜார்ஜ், பேபிஜாய், பாலா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும் வனிதா விஜயகுமார் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் வித்தியாசமாக தோன்றுகிறார். இத்திரைப்படத்தில் கேரளாவிலிருந்து நந்து முதல்முறையாக தமிழில் அறிமுகமாகிறார்.  மலையாளத்தில் பிரிதிவ்ராஜூடன் ஐயப்பனும் கோசியும், ஓட்டம்  போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் M. ஷாம். இது இவருக்கு முதல் படம். ஒளிப்பதிவு ஜே.ஆர்.கே. இசை கணேஷ் சந்திரசேகர்.  எடிட்டிங் V.S விஷால். இப்படத்தின் TITTLE கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு கூறியுள்ளது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 15 முதல் தொடங்கப்படுகிறது. அதற்கான நடிகர், நடிகைகள் தேர்வும் நடைபெற்றுவருகிறது.

Tags : Vanitha

தொடர்புடைய இணைப்புகள்

Ettu thottakkal hero actor vetri next movie update

People looking for online information on Vanitha will find this news story useful.