காலில் காயத்துடன் 'எதிர்நீச்சல் ஈஸ்வரி' நடிகை கனிகா.. என்னாச்சு? அவரே வெளியிட்ட தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை கனிகா காயத்துடன் காலில் கட்டு போட்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Ethirneechal Serial Actress Kaniha Injured Leg Viral Photo
Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "மதுரையில் கடைசி நாள்".. சூரி நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் கொடுத்த அனா பென்!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனிகா.
மதுரையை சார்ந்த இவர் 5 ஸ்டார் படம் மூலம் அறிமுகமானார்.

பின் நடிகர் அஜித்துடன் வரலாறு (2006) படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆனார்.  ஆட்டோ கிராப், எதிரி படங்களிலும் நடித்துள்ளார்.

ஷங்கரின் அந்நியன், சிவாஜி, சச்சின் படங்களின் ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியதும் கனிகா தான். மலையாளத்தில் மோகன்லால், ஜெயராம், சுரேஷ் கோபி, மம்முட்டி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

Images are subject to © copyright to their respective owners.

தற்போது தமிழில் விஜய் சேதுபதி நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்துள்ளார்.  நடிகை கனிகா தற்போது சன் டிவியின் எதிர் நீச்சல் மெகா தொடரில் தற்போது நடித்து வருகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் கனிகாவும் ஒருவர். நடிகை கனிகா, அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டவர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகை கனிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காயத்துடன் காலில் கட்டு போட்டுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "ஒரு வாரம் முடிந்தது. இன்னும் 5 வாரங்கள் செல்ல வேண்டி உள்ளது. புதிய பூட்ஸ் உடன் நடக்க கற்று வருகிறேன்" என கனிகா அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Also Read | BHOLAA: கைதி படத்தின் இந்தி ரீமேக்.. அஜய் தேவ்கன், அமலாபால், தபு நடிப்பில் அசத்தல் டிரெய்லர்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ethirneechal Serial Actress Kaniha Injured Leg Viral Photo

People looking for online information on EthirNeechal Serial, Kaniha will find this news story useful.