"அஜித் சாரை சூப்பர் ஸ்டார் மாதிரினு சொன்ன டயலாக்".. எதிர் நீச்சல் சீரியல் நடிகர் சாணக்யா EXCLUSIVE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எதிர் நீச்சல் சீரியல் நடிகர் சாணக்யா நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Ethirneechal Arun Chaanakyaa Exclusive Interview about Ajithkumar
Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | சந்திரமுகி 1-ல் ஜோதிகா நடிப்பு பத்தி Part 2 -வின் 'சந்திரமுகி' கங்கனா சொன்னது என்ன?

சன் டிவியில் தற்போது  ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. நடிகை தேவயானி நடிப்பில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'கோலங்கள்' மெகாத்தொடரை இயக்கிய இயக்குனர் திருச்செல்வம் இந்த 'எதிர்நீச்சல்' தொடரையும் தற்போது இயக்கி வருகிறார்.

இந்த தொடரில் நடிகர் மாரிமுத்து, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா, சத்ய பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த சீரியலில் அருண் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் சாணக்யா.

Images are subject to © copyright to their respective owners.

இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக பரமசிவன், கஜினி, ஆதவன் ஆகிய படங்களிலும் சில சீரியலிலும்  குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை நடிகர் சாணக்யா அளித்துள்ளார். அதில் சிறுவயதில் பரமசிவன், கஜினி மற்றும் ஆதவன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். குறிப்பாக பரமசிவன் படத்தில் நடிகர் அஜித் உடன் நடித்தது பற்றிய கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

அஜித் உடனான சந்திப்பு குறித்தும் படப்பிடிப்பு தளத்தில் மினி ரிமோட் ஹெலிகாப்டரை அஜித் ஓட்டிய அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும், "அஜித் சாரை சூப்பர் ஸ்டார்னு சொன்ன மாதிரி டயலாக் இருந்ததுனு கேள்விப்பட்டோம்". என்ற கேள்விக்கு "ஆமா அது வந்து அந்த டயலாக் எப்படி இருக்கும்னா சூப்பர் ஸ்டார் மாதிரி கலக்கீட்டீங்கனு வரும். அதுக்கு முந்தைய காட்சியில் என்ட்ரி லகலகலகனு வசனம் சொல்லிட்டு தான் வருவேன்" என பதில் அளித்தார்.

2006 ஆம் ஆண்டு பொங்கலுக்கு  அஜித் நடிப்பில் வெளிவந்த பரமசிவன் படத்தினை இயக்குனர் பி. வாசு இயக்கி இருந்தார். இந்த படம் சந்திரமுகி படத்திற்கு பிறகு பி‌‌. வாசு இயக்கிய திரைப்படமாகும்.

Also Read | "என் உயிரே நீ தான்".. இதுவரை காணாத போட்டோக்களை வெளியிட்டு சினேகாவை வாழ்த்திய பிரசன்னா!

"அஜித் சாரை சூப்பர் ஸ்டார் மாதிரினு சொன்ன டயலாக்".. எதிர் நீச்சல் சீரியல் நடிகர் சாணக்யா EXCLUSIVE! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ethirneechal Arun Chaanakyaa Exclusive Interview about Ajithkumar

People looking for online information on Ajith Kumar, Arun Chaanakyaa, EthirNeechal Serial, Ethirneechal Serial Arun will find this news story useful.