சூர்யா நடிக்கும் ET படம் சொல்லும் கருத்து இது தான்! FDFS பாத்துட்டு நடிகர் புகழ் போட்ட பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகர் புகழ் ET படத்தினை FDFS ஆக ரசிகர்களுடன் பார்த்தார்.

Advertising
>
Advertising

நடிகர் சூர்யா நடிப்பில், இன்று (10.03.2021) திரையரங்குகளில் வெளியாகிவுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த சூர்யாவின் 40வது திரைப்படம் இது. சூர்யா நடிப்பில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகிவுள்ளது.

இதற்கு முன்பு அவரின் நடிப்பில் வெளியாகியிருந்த 'சூரரைப் போற்று' மற்றும் 'ஜெய்பீம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும், ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது. கடைசியாக 'காப்பான்' திரைப்படம் தான், கடந்த 2019 ஆம் ஆண்டில், திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்ற இந்த படம் 150:38 (2:30:38) மணி நிமிடங்கள் ஓடுகிறது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ஒரே நாளில் PAN INDIA படமாக ET வெளியாகி உள்ளது.

இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ISC ஒளிப்பதிவு செய்கிறார் இவர் சூர்யா நடித்த 'நந்தா', 'வாரணம் ஆயிரம்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். நடிகர் சத்யராஜ், புகழ், சூரி, பஞ்சு சுப்பு, வினய்  முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் FDFS காட்சிக்கு சென்னை கோயம்பேடு ரோகினி திரையரங்கில் புகழ், வினய் சென்று ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர். மேலும் ரசிகர்களுடன் வீடியோவும், போட்டோக்களும் எடுத்தனர். இதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகழ், "எதற்கும் துணிந்தவன் படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி. பெற்றோர்கள் பிள்ளையை பெற்றால் மட்டும் போதாது பிள்ளைகளுக்கு இது சரி இது தவறு என்று கற்றுக்கொடுப்பதே நல்ல வளர்ப்புக்கு அடையாளம்... ET in theatres" என பதிவிட்டுள்ளார்.

சூர்யா நடிக்கும் ET படம் சொல்லும் கருத்து இது தான்! FDFS பாத்துட்டு நடிகர் புகழ் போட்ட பதிவு வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Etharkkum Thuninthavan ET FDFS Pugazh Vinay at Rohini

People looking for online information on ET, ET Review, Etharkkum Thuninthavan, Etharkkum Thuninthavan Review, Priyanka Mohan, Suriya will find this news story useful.