முன்பு எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி-கமல் என்று இருந்த தமிழ் சினிமா இன்று அஜித்-விஜய் என்று உள்ளது.
அஜித் விஜய் படங்கள் திரையரங்கில் வெளியாகும் பொழுது தமிழ் சினிமாவில் புதிய சாதனையை தொடும். அதிலும் குறிப்பாக 2 நாயகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் பொழுது சினிமா உலகில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தும்.
இதுவரை அஜித் விஜய் திரைப்படங்கள் வெள்ளித்திரையில் 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
முதன் முதலாக கோயம்புத்தூர் மாப்பிள்ளை - வான்மதி திரைப்படங்கள் மோதின. இதில் அஜித் நடித்த வான்மதி வெற்றி பெற்றது. அகத்தியன் இயக்கி இருந்த வான்மதி திரைப்படத்தின் வெற்றியால் தான் காதல் கோட்டை எனும் மிகப்பெரிய வெற்றித் திரைப்படம் உருவாக காரணமாக அமைந்தது,
இரண்டாவது தடவை பூவே உனக்காக, கல்லூரி வாசல் திரைப்படங்கள் மோதின. இதில் விஜய் நடித்த பூவே உனக்காக வெற்றி பெற்றது. பூவே உனக்காக திரைப்படம் தான் தளபதி விஜய் நடிப்பில் வெற்றி அடைந்த முதல் திரைப்படமாகும்.
மூன்றாம் முறையாக காதலுக்கு மரியாதை உடன் ரெட்ட ஜடை வயசு திரைப்படம் மோதியது. இதில் விஜய் நடித்த காதலுக்கு மரியாதை வெற்றி பெற்றது.
நான்காம் முறை நிலவே வா உடன் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படம் மோதியது. இதில் அஜித் நடித்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படம் வெற்றி பெற்றது.
ஐந்தாம் முறையாக துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் உன்னை தேடி திரைப்படமும் மோதின. இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற்றது. இதில் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் சுந்தர் சி இயக்கிய உன்னைத்தேடி படத்தை விட சற்று கூடுதல் நாட்கள் ஓடியது.
ஆறாம் முறையாக குஷி திரைப்படமும் உன்னைக்கொடு என்னைத்தருவேன் திரைப்படமும் மோதின. இதில் குஷி திரைப்படம் வெற்றி பெற்றது.
ஏழாம் முறையாக தீனாவும் பிரண்ட்ஸ் திரைப்படமும் மோதின இதில் இரண்டு திரைப்படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றன. இருப்பினும் தீனா திரைப்படம் ஆக்ஷன் ஹீரோவாக அஜித்தின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது.
எட்டாவது முறையாக பகவதி திரைப்படமும் வில்லன் திரைப்படமும் மோதின. இதில் வில்லன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அஜித்தின் திரை வாழ்வில் முக்கிய திரைப்படமாக அமைந்தது.
ஒன்பதாவது முறையாக திருமலை திரைப்படமும் ஆஞ்சநேயா திரைப்படமும் மோதின இதில் திருமலை திரைப்படம் வெற்றி பெற்றது. விஜய்யை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது திரைப்படம் திருமலையாகும்.
பத்தாவது முறையாக ஆதி திரைப்படமும் பரமசிவன் திரைப்படமும் மோதின. இதில் ஆதி திரைப்படத்தை விட பரமசிவன் திரைப்படம் கூடுதல் வரவேற்பை பெற்றது.
11வது முறையாக போக்கிரி, ஆழ்வார் திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதின. இதில் போக்கிரி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. 2007 ஆம் ஆண்டு வெளியான படங்களில் சிவாஜி, பில்லா படத்திற்கு பிறகு அதிக வசூல் செய்த படமாக போக்கிரி அமைந்தது.
12வது முறையாக 2014ம் ஆண்டு பொங்கலுக்கு வீரம், ஜில்லா திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதின இந்த முறை வீரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்நிலையில் தற்போது தல அஜித் நடித்த வலிமை (VALIMAI) திரைப்படம் பொங்கலுக்கு வெளிவருவதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதேபோல தற்போது விஜய் நடித்துக்கொண்டிருக்கும் பீஸ்ட் (Beast) படமும் பொங்கலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளியாகுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.