'செம்ம'... அஸ்வினும் புகழும் இணையும் புதிய படம்.. டைட்டிலை வெளியிட்ட ஆர்யா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் அஸ்வின்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தாண்டி இசை ஆல்பங்களில் நடித்து வந்த அஸ்வின், டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்தப் படம் காதல் மற்றும் காமெடியை மையப்படுத்தி உருவாக இருக்கிறது.

இப்படத்தின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில் படக்குழு "என்ன சொல்ல போகிறாய்", என படத்திற்கு பெயர் வைத்துள்ளனர். மேலும் இப்படத்தில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இடம் பெற்று எளிமையான நகைச்சுவை திறமையால் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற புகழ் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.


ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் ஜி. துரைராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். விவேக், மெர்வின் இசை அமைக்கும் இப்படத்தில் மதிவதனன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தின் தலைப்பை நடிகர் ஆர்யா வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சக்க போடு போட்ட அஸ்வினும் புகழும் திரைப்படத்தில் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தில் இணையும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Aswin, Pugaz

தொடர்புடைய இணைப்புகள்

Enna solla pogirai movie tittle released actor arya

People looking for online information on Aswin, Pugaz will find this news story useful.