குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் நடிகர்கள் அஸ்வின் குமார் மற்றும் புகழ். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படத்திற்கு “என்ன சொல்ல போகிறாய்” என்று பெயரிடப்பட்டது.
சென்னையின் நகர்ப்புற பகுதியில் நடைபெறும் காதல் காமெடி கதையாக "என்ன சொல்லப் போகிறாய்" திரைப்படம் உருவாகிறது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவை ரிச்சர்ட் எம் நாதன் கையாள்கிறார். இந்த படத்தில் தேஜு அஸ்வினி மற்றும் அவந்திகா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். குணசித்திர கதாபாத்திரத்தில் டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 19ல் சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. இந்த படம் முழுவதும் அஸ்வினுடன் காமெடி கேரக்டராக நடிகர் புகழ் நடிக்கிறார். நிஜ வாழ்க்கையிலும் அஸ்வினின் நெருங்கிய நண்பரான புகழ், இந்த திரைப்படத்தில் நடிப்பது இவர்களின் காம்போ மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.
இந்த திரைப்படத்துக்கு விவேக்-மெர்வின் இசை அமைக்கின்றனர். டிரைடண்ட் ஆர்ட் ரவீந்திரன் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் ஹரிஹரன் இயக்குகிறார். இந்த படத்தின் டீசர் (10.11.2021) அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை படக்குழு முடித்துள்ளது, இந்த திரைப்படம் ஹீரோவாக அஸ்வின் குமாரின் அறிமுக திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் கிறிஸ்துமஸ்க்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது, இச்சூழலில் படத்தின் ரிலீஸ் ஜனவரிக்கு தள்ளிப்போவதாக படத்தின் இயக்குனர் தனது டிவிட்டரில் அறிவித்துள்ளார். தன் வாழ்வில் நடந்த நல்ல விஷயம் இந்த படம் எனவும் அறிவித்துள்ளார்.
இயக்குநர் A.ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ள “என்ன சொல்ல போகிறாய்” படத்தை Trident Arts நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரித்துள்ளார்.தொழில்நுட்ப குழுவில் ரிச்சர்ட் M நாதன் (ஒளிப்பதிவு ), G.துரைராஜ் (கலை), மதிவதனன் (எடிட்டர்), பாலகுமாரன் M (உரையாடல்), அப்சர் R (நடன அமைப்பு), A கீர்த்திவாசன் (ஸ்டைலிஷ்), ஜெயராமன் (தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்), S.ரூபினி (புரடக்சன் கண்ட்ரோலர் ) , D.செல்வராஜ்-SN அஷ்ரஃப் (தயாரிப்பு நிர்வாகி), சுரேஷ் சந்திரா -ரேகா D one (மக்கள் தொடர்பு), Beat Route/ஹரிஹரன் (கிரியேட்டிவ் & மார்க்கெட்டிங்), தண்டோரா (பப்ளிசிட்டி டிசைன்ஸ்).