அனிருத் வெளியிட்ட ‘என்ன சொல்ல போகிறாய்’ FIRST சிங்கிள்.. நேரலையில் ASHWIN உருக்கம்! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி மூலம் பிரபலமானவர் நடிகர் அஸ்வின். பல குறும்படங்களிலும், விஜய் டிவி சீரியலிலும் நடித்து வந்த இவர், பின்னர் குக் வித் கோமாளி என்கிற ரியாலிட்டி ஷோவின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானதை அடுத்து, குக் வித் கோமாளி டெலிவிஷன் ரியாலிட்டி ஷோவுக்காக - MOST POPULAT ACTOR - MALE என்கிற Behinwoods டிஜிட்டல், டெலிவிஷன் மற்றும் சோஷியல் மீடியாவுக்கான விருது, Behinwoods Gold Icons நிகழ்வில் அஸ்வினுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதனிடையே நடிகர் அஸ்வின் குட்டி பட்டாஸ், அடிபொலி உள்ளிட்ட ஆல்பம் பாடல்களில் நடித்தார். இந்த பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இளசுகளின் டிரெண்டிங் பாடல்களாக இந்த பாடல்கள் அமைந்தன. இதனைத் தொடர்ந்து அஸ்வின் எப்போது வெள்ளித்திரைக்கு வருவார் என்று அவருடைய ரசிகர்கள் ஏங்கத் தொடங்கி விட்டனர்.

இதை பூர்த்தி செய்யும் விதமாக டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிப்பில் இயக்குனர் ஹரிஹரன் இயக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ என்கிற திரைப்படத்தில் அஸ்வின் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த படத்தின் பூஜை நிகழ்வுகள் முன்னதாக நடந்தன. இந்த படத்தில் அஸ்வின், தேஜூ அஸ்வினி, புகழ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், ‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலை தற்போது இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்டு இருக்கிறார். ‘ஆசை’ என்று பெயரிடப்பட்ட இந்த பாடல் தற்போது வெளியாகி அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்துக்கு விவேக்-மெர்வின் இசை அமைத்திருக்கின்றனர். இவர்களின் இசையில்தான், இந்த பாடல் தற்போது உருவாகி வெளியாகி இருக்கிறது.

இதனை அடுத்து திடீர் நேரலையில் சமூக வலைதளத்துக்கு வந்த அஸ்வின், “இது ஒரு சர்ப்ரைஸ் நேரலையாக இருக்கும். நான் பயந்து கொண்டே இருந்தேன். எப்படி இந்த பாடலை மக்கள் வரவேற்க போகிறார்கள் என்று.. ட்விட்டரில் அபரிமிதமான அன்பை காணமுடிகிறது.. நான் அதிகம் பேச மாட்டேன்.. எனக்கு பதிலாக நீங்கள் பேசுகிறீர்கள்.. அவற்றை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.. அவற்றுக்கு நன்றியும் மகிழ்ச்சியும்.. எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.. இப்போதைக்கு இந்த நன்றியை வைத்துக்கொள்ளுங்கள்..

இன்னும் எவ்வளவு படம் பண்ணப் போகிறேன் என்பது தெரியவில்லை. இந்த சப்போர்ட் எப்போதும் வேண்டும். இந்த சப்போர்ட் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என்பது தெரியும்!” என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.

அனிருத் வெளியிட்ட ‘என்ன சொல்ல போகிறாய்’ FIRST சிங்கிள்.. நேரலையில் ASHWIN உருக்கம்! வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Enna Solla Pogirai first single Aasai Ashwin surprise live video

People looking for online information on Aasai EnnaSollaPogirai, Ashwin, Ashwin Pugazh CookWithComali2, AshwinLive CookuWithComali will find this news story useful.