ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா நடித்து வெளியான திரைப்படம் எனிமி.
மிருணாளினி ரவி, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள முக்கியமான ஹிட் பாடல், விசேஷ சூழலில் வரும் டம் டம் பாடல்.
பாடலாசிரியர் விவேக் எழுதிய இந்த பாடலை ஸ்ரீவர்தினி, அதிதி, சத்யா யாமினி, ரோஷினி மற்றும் தேஜஸ்வினி பாடியுள்ளனர்.
இந்த பாடலில் நாயகி மிருணாளினியின் பின்னணனியில் நடனம் ஆடிய டான்ஸர் பிரபலமானார். அவருக்காக ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர்.
டாட்டூவுடன் டான்ஸ் ஆடிய அவரது டான்ஸ் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அவர் யார் என்ன என்று பலரும் தேடி வந்தனர். அவர் பெயர்தான் சந்திரா ஜோஷி. பிஹைண்ட்வுட்ஸ்க்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ள அவர், “எனக்கு 19 வயதில் திருமணம் ஆகியது. திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகின்றன.
பிடித்ததை செய்கிறேன். டான்ஸ் ஆடுவதற்காக கல்லூரி படிப்பை டிராப் செய்தேன். என் துறையில் எனது வளர்ச்சியை தடுக்கும் எதையும் நான் துறக்க தயங்குவதில்லை. மேலும் ஒரு தமிழ்ப்படத்தில் ஆடியுள்ளேன். அதிலும் என்னை காணலாம்” என பேசியுள்ளார். பேசும் முழு பேட்டி வீடியோவை இணைப்பில் காணலாம்.