ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சர்வைவர் ரியாலிட்டி ஷோ விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. நடிகர் மற்றும் இயக்குநர் ஆக்ஷன் கிங் அர்ஜூன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன லஷ்மி பிரியா சந்திரமௌலி, பிஹைண்ட்வுட்ஸ்க்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.
அதில், “நாங்க விளையாடும் போது ஹோஸ்ட் மைக்குல சொல்றது எதுவுமே எங்களுக்கு கேக்காது. கடைசி சுற்றில் நானும் சரணும் சேர்ந்து விளையாடினோம். அப்போது நாங்கள் டிஸ்குவாலிஃபை ஆனோம். அப்போ அவரு நான்கு முறை முட்டியை மடக்கணும் என சரணுக்கு வார்னிங் கொடுத்திருக்கிறார்.
கடைசியா லஷ்மி பிரியா & சரண் டிஸ்குவாலிஃபைனு சொன்னது மட்டும்தான் என் காதுல விழுந்துச்சி.நான் ஏன்னென்று கேட்டேன். அதற்கு அவர் ஏதோ விளக்கம் சொல்லியிருக்காரு. அது என் காதுல விழல. அதுக்கு அப்புறம் நான் அத முடிச்சிட்டு கேம் நடத்தக்கூடிய டீமிடம் கேட்டேன். கால் முட்டியை மடக்காததால்தான் என சொன்னார்களே தவிர, கையை கீழ இறக்கியதால்தான் என யாரும் கூறவில்லை. எனக்கு தெரிந்தது அவ்ளோதான்.
அர்ஜூன் சாரிடம் இதை பற்றி நிறைய முறை பேசினேன். ஆனால் ஆடியன்ஸ் கடுப்பாகி விட்டார்கள். அவரே விட்டுட்டார். ஏன் நான் அதை பற்றியே பேசுறேன்னு. சர்வைவர் நிகழ்ச்சியில் உள்ள உலகமே வேறு. அதை புரிந்துகொள்ள வேண்டும். ” என்று லஷ்மி பிரியா சந்திரமௌலி பல்வேறு விஷயங்களை கூறியுள்ளார்.
ஒரு டீமில் யாருடனும் சேர்ந்து நாம் ஒரு கேமை தனிப்பட்ட முறையில் தந்திரத்தை வகுத்துக் கொள்வதற்கான சுதந்திரம் இல்லை. சிலர் நந்தாவை சார்ந்து இருக்கிறார்கள். அது அவர்களின் தந்திரம். சொந்தமாக செய்ய மாட்டார்கள். ஐஸ்வர்யா தனிப்பட்ட முறையில் எதையும் செய்வார். ஆனால் ஒரு விஷயம் நடக்கவேண்டும் என்றால் நந்தாவிடம் சொல்லி தான், செய்கிறார்கள். இதை பலமுறை சொன்னபோது சரி என்று சொன்னவர்கள், செயல் என்று வரும்போது அது எனக்கு சாதகமாக இல்லை. அதை குறை கூறவில்லை அதுதான் அவர்களின் கேம்.
டீம்ல யாரு வீக் என 5 மணி நேரம் உரையாடல் நடந்தது. அப்போது, யாருடைய உதவியும் இன்றி, யாரால் ஏறியிருக்க முடியும்? இந்த மாதிரி ஹைபோதெடிகல் கேள்வி நெடுநேரம் சென்றது. நான் தான் வீக்கஸ்ட் என நான் ஒப்புக்கொண்டபோதும், இந்த உரையாடல் தொடர்ந்ததால், நான் நிதானத்தை இழந்து கோபம் கொண்டேன். நான் கேமராவுக்காகலாம் நான் எதுவுமே பண்ணல. ஷோவில் காண்பித்தது 30% தான். நாங்கள் 70% கஷ்டப்பட்டோம். போய் முதல் 3 நாள், உணவு கிடைக்காது. பச்சை கிழங்குதான் சாப்பிட முடிந்தது. நெருப்பு இல்லாததால் சமைக்க முடியவில்லை.
பீச்சில் குளிர்காற்றில் மிகவும் கஷ்டப்பட்டோம். தீவுப்பகுதியில் லைட் கிடையாது. அவ்வளவு இருட்டு. போட் ரைடிங் சிரமம். அந்த கடலில் மீன் பிடிக்க வேண்டும் என்றால் நடுக்கடலுக்கு போக வேண்டும். பிசிக்கலாக மட்டுமல்லாமல், மெண்டல், என்னைவிட உமாபதி, ஐஸ்வர்யா, நந்தா, அம்ஜெத் ஆகியோர் பிசிக்கலி ஸ்ட்ராங். எனக்கு கீழேயும் பிசிக்கலாக வீக்கானவர்கள் உள்ளார்கள். நான் மிடில் ஆர்டரில் இருக்கிறேன்.
கேமே மிகவும் சிரமமானது. நான் சர்வைவல் பண்ணுவதை தான் பார்க்க முடிந்தது. எனவே மக்கள் என்ன நினைப்ப்பார்கள் என்பதை யோசிப்பதை விட, நமக்கு நாம் உண்மையாக இருக்கவே நினைத்தேன். சிருஷ்டி, உமாபதி உள்ளிட்டோரிடம் ஒரு பாசிடிவ் வைப் எனக்கு இருந்தது. சிலருடன் நான் மிங்கிள் ஆக சிரமப்பட்டேன். பார்வதி மற்றும் நந்தா இருவருடனும் எனக்கு செட் ஆக சிரமம் இருந்தது.
இந்த கேமை புரிந்துகொண்டு எல்லா விதத்திலும் சரியாக ஆடுபவர் உமாபதி. நந்தா மிகவும் க்ளவராக (ராஜதந்திரத்துடன்) ஆடினார். விஜியும் எப்படி விளையாட வேண்டும் என்று பார்த்து க்ளவராக விளையாடுகிறார். உமாபதி வெற்றிபெறலாம் என பெர்சனலாக கருதுகிறேன்!” என குறிப்பிட்டுள்ளார்.