போடு!! ELIMINATION-க்கு பிறகு மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் பிரபல போட்டியாளர் மாஸ் எண்ட்ரி!.. WILD CARD -ஆ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து வெளியேற்றப்பட்ட பிரபல போட்டியாளர் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் தற்போது என்ட்ரி கொடுத்திருக்கிறார். இது பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரிடையிலுமே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

eliminated contestant entered again biggbosstamil5
Advertising
>
Advertising

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் நடிகர் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதன் முதல் நாளில் 18 போட்டியாளர்கள் இணைந்தனர். தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் திருநங்கை போட்டியாளரான நமிதா மாரிமுத்து வெளியேறியதாக பிக்பாஸ் அறிவித்திருந்தார்.

eliminated contestant entered again biggbosstamil5

இதனைத்தொடர்ந்து 17 போட்டியாளர்களுடன் இயங்கிவந்த பிக்பாஸ் வீட்டுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக உரசல்களும், சண்டைகளும், சச்சரவுகளும் எழத்தொடங்கின. இப்படி சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருந்த நிகழ்ச்சியில் முதலில் நாடியா சாங் வெளியேறினார்.

மலேசியத் தமிழரான இவரைத்தொடர்ந்து அபிஷேக் ராஜா வெளியேற்றப்பட்டார். அவரை அடுத்து, பிரபல போட்டியாளரான நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு வெளியேறினார். அதன்பிறகு சுருதி மற்றும் மதுமிதா அடுத்தடுத்து வெளியேறினர்.

இவற்றில் சில வாரம் எலிமினேஷனில் வெளியேறப்போவது யார் என்பது எதிர்பார்த்தபடி இருக்கும். சில வாரம் எதிர்பார்க்காத ஒரு நபர் வெளியேற்றப்படுவார். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்கிற பிக்பாஸின் தாரக மந்திரத்தை மீண்டும் நிரூபிக்கும் வகையில் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் இந்த வார இறுதியில் சர்ப்ரைஸாக அதிரடி எண்ட்ரி கொடுத்திருக்கிறார் முன்னதாக எலிமினேட் செய்யப்பட்ட பிரபல போட்டியாளர் அபிஷேக் ராஜா.

இவர் எண்ட்ரி கொடுத்ததுமே ஹவுஸ்மேட்ஸ் உற்சாகமாகி விட்டனர். பிரியங்கா மட்டும் அபிஷேக்கை பார்த்ததும் அழுதுகொண்டே நின்று கொண்டிருந்தார். அபிஷேக், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் செய்தி கேட்ட உடனேயே முதலில் மௌனமாகி பேச்சு மூச்சின்றி அழத் தொடங்கியவரும் பிரியங்கா தான்.

அபிஷேக், நிரூப், பிரியங்கா 3 பேரும் நல்ல நண்பர்களாக, ஒருவரை ஒருவர் புரிந்துவைத்துக்கொண்ட, அதே சமயம் நன்றாக விளையாடக் கூடிய போட்டியாளர்கள் என அனைத்து போட்டியாளர்களும் இவர்களைப்பற்றி குறிப்பிடப்பட்டு வந்தனர். இந்நிலையில், அபிஷேக் கலந்து கொண்டிருக்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்முறை அபிஷேக் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்திருக்கிறாரா? எவ்வளவு நாட்கள் இருப்பார்? என்ன நிபந்தனைகள் அவருக்கு? என்பது பற்றிய விளக்கங்கள் விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் கேமை துடிப்பாகவும் பரபரப்பாகவும் ஆடியதிலும் புதிய ஸ்ட்ரேஜிக்ஸை கையாண்டு ஆடியதிலும் தனி கவனம் ஈர்த்தவர் அபிஷேக் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Eliminated contestant entered again biggbosstamil5

People looking for online information on AbishekRaaja, Biggboss, Biggbosstamil, BiggBossTamil5, Chinnaponnu, Madhumidha, Nadiya Chang, Shruthi, Shruti, Surithi, Vijay Television will find this news story useful.