யோகி பாபுவை ஆசிர்வதிக்கும் மறைந்த லட்சுமி யானை.. நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் THROWBACK வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் யோகி பாபுவை மறைந்த மணக்குள விநாயகர் கோயில் லட்சுமி யானை ஆசிர்வாதம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Advertising
>
Advertising

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் லட்சுமி என்ற பெண் யானை மிகவும் பிரபலமானது. கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் தேதி காலை நடைப்பயிற்சியின் போது கல்வே கல்லூரி அருகே சென்ற போது மயங்கி விழுந்த யானை  அங்கேயே உயிரிழந்தது என கூறப்படுகிறது.

யானையின் உடலுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். யானையின் உடல் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. யானையின் மரணத்தால் மணக்குள விநாயகர் கோயில் நடை  அன்று சாத்தப்பட்டது.

உயிரிழந்த லட்சுமி யானைக்கு பக்தர்கள், புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், புதுவை முன்னாள் முதல்வர்  நாரயணசாமி உள்ளிட்டோரும் நேரில் வந்து கண்டு அஞ்சலி செலுத்தினர்.

சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், "யானை லட்சுமிக்கு கல்லறை அமைத்து, கற்சிலை அமைக்க விரைவில்  நடவடிக்கை எடுக்கப்படும். லட்சுமி யானையின் தந்தம் கேரளாவில் உள்ள கோயில்களில் பராமரிப்பு செய்வது போல் அலங்கரிக்கப்பட்டு மணக்குள விநாயகர் கோவிலிலேயே வைக்கப்படும்" என்றும் புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறினார்.

இந்நிலையில் நடிகர் யோகி பாபுவை மறைந்த மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி ஆசிர்வாதம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஃபோட்டோ கிராபர் ஶ்ரீ ராம் என்பவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் நடிகர் யோகி பாபுவை லட்சுமி யானை ஆசிர்வாதம் செய்கிறது. லட்சுமி யானைக்கு யோகி பாபு அருகம்புல் கொடுப்பதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் கொடுக்கப்படவில்லை.

தொடர்புடைய இணைப்புகள்

Elephant Lakshmi Blessing Yogi Babu viral THROWBACK video

People looking for online information on Lakshmi Elephant, Yogi Babu will find this news story useful.