‘ஈரமான ரோஜாவே 2’-ல அனைவரும் எதிர்பார்க்கும் அந்த சம்பவம் வரப்போகுதா..? ஜீவா கொடுத்த அப்டேட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜா சீரியலின் இரண்டாவது சீசன் பலரையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக ஜீவா & பிரியா மற்றும் பார்த்தி & காவ்யா இணை பலருக்கும் பிடித்தமான ஜோடியாகிவிட்டனர்.

Advertising
>
Advertising

அண்மையில்தான் பார்த்தியின் அம்மா தொடர்ந்து வற்புறுத்தியதால் பார்த்தியை விட்டு விலகக் கூடிய முடிவை காவ்யா உறுதியாக எடுத்தார். இதற்கு காரணம் காவ்யா யாரையோ பார்த்திக்கும் முன்பாகவே காதலித்ததாக பார்த்தியின் அம்மா பார்வதிக்கு தெரிய வந்தது தான்.  ஒரு வழியாக பார்த்தியும் உடன்பாடு இல்லை என்றாலும் காவ்யா கேட்ட விவாகரத்தை கொடுத்து விட்டார். ஆனால் ஒருவேளை காவ்யாவிற்கு தன்னுடன் சேர்ந்து வாழ விருப்பம் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் சேர்ந்து வாழலாம் என்று ஒரு கடிதத்தையும் பார்த்தி காவ்யாவுக்கு எழுதியிருந்தார்.

இதனிடையே பார்த்திக்கு, தன்மகள் ரம்யாவை திருமணம் செய்து வைக்க தேவி சூழ்ச்சி செய்து அதை திருமணம் வரை கொண்டு வந்து விட்டார். அப்போது பார்த்தி எழுதிய கடிதம் கிடைத்து, நேரில் வந்த காவ்யாவை தேவி ஆள் வைத்து கடத்த முயற்சித்தார். அதை ஜீவா தடுத்து விட்டார். இன்னொரு புறம் தேவிக்கு எதிரான சாட்சியமாக ஜேகே, தேவியின் சூழ்ச்சிகளை அறிந்த பார்வதி அனைவராலும் திருமணம் தடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பார்த்தி & காவ்யா திருமணம் அரங்கேறிவிட்டது. ஆனால் ஜீவா & ப்ரியா ஜோடியை பலருக்கும் பிடித்திருந்தாலும் இன்னும் இவர்கள் இருவரும் சரிவர ஒன்றுசேரவில்லை. இதுகுறித்து பிஹைண்ட்வுட்ஸில் பேசினார் ஜீவா கேரக்டரில் நடிக்கும் திரவியம். அதில், “ப்ரியாவை பொறுத்தவரை, பார்த்தியை திருமணம் செய்ய முடியாமல் போனதால் மனம் மாற்றிக்கொண்டு ஜீவாவை திருமணம் செய்துகொண்டவர். ரசிகர்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் ஒருபுறம் ஜீவா & ப்ரியா சேர்வது இன்னொருபுறம் பார்த்திக்கும் ப்ரியாவுக்கும், ஜீவா & காவ்யா இடையே இருந்த பழைய காதல் விவகாரம் தெரிந்தால் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள்.?

அந்த நேரத்தில் ப்ரியாவின் கணவர் ஜீவா & பார்த்தியின் மனைவி காவ்யா ஆகியோரின் மனநிலை என்னவாக இருக்கும்? அதாவது பார்த்தி மற்றும் ப்ரியாவுக்கு இந்த உண்மைகள் தெரியவரும்போது, அவர்களை ஜீவா & காவ்யா எப்படி அவர்களை சந்திக்கப்போகிறார்கள். என்கிற தருணத்தை தான் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது விரைவில் வரவிருக்கிறது. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து எழுதுகிறார்கள். காட்சிகளை உருவாக்குகிறார்கள். எப்போது எதை எப்படி கொண்டு வரவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். ” என குறிப்பிட்டுள்ளார்.

‘ஈரமான ரோஜாவே 2’-ல அனைவரும் எதிர்பார்க்கும் அந்த சம்பவம் வரப்போகுதா..? ஜீவா கொடுத்த அப்டேட்..! வீடியோ

Eeramana Rojave 2 twist coming soon Jeeva dhiraviyam Interview

People looking for online information on Eeramana Rojave Dhiraviyam interview, Eeramana Rojave Jeeva Interview will find this news story useful.