நடிகர் சூர்யா, அடுத்ததாக இயக்குனர் சிவா இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார்.
Also Read | மாலத்தீவுக்கு இன்பச்சுற்றுலா செல்லும் மாளவிகா மோகனன்.. கடலிலிருந்து பகிர்ந்த வீடியோ!
இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா42’ என தலைப்பிடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. Studio Green & UV Creations நிறுவனங்கள் சார்பில் வம்சி கிருஷ்ணா, பிரமோத் & KE ஞானவேல் ராஜா இப்படத்தினை தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர்கள் சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர். "வலிமை மிகு வீரம்" எனும் அடைமொழியுடன் டைட்டில் அமைந்தது.
மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பட்டாணி நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிச்சாமி பணிபுரிகிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய உள்ளார். வசனங்களை மதன் கார்க்கி எழுத உள்ளார்.
இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் சுந்தர் சண்டை காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். இந்த படத்தின் எடிட்டராக பிரபல மலையாள சினிமா எடிட்டர் நிஷாத் யூசுப் பணிபுரிகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கோவாவில் துவங்கியது. மேலும் இந்த படத்தின் மோஷன் போஸ்டரில் குறிப்பிடப்பட்ட அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டார், பெருமனத்தார் ஆகிய 5 கதாபாத்திரத்திலும் நடிகர் சூர்யாவே நடிக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்த படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், "சூர்யா நடிக்கும் சூர்யா 42 படத்தின் வகைமை ஃபேண்டஸி என கூறியுள்ளார். மேலும் 1000 வருடங்களுக்கு முன்பும், தற்போதைய காலகட்டத்திலும் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது, சூர்யா நடிப்பில் இதுவரை காணாத ஒரு படமாக இந்த படம் இருக்கும்" என்று யூசுப் கூறியுள்ளார்.
Also Read | காயத்துக்கு மீண்டும் சிகிச்சை எடுக்கும் பூஜா ஹெக்டே.. அவரே பகிர்ந்த வைரல் ஃபோட்டோ!